search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samsung Galaxy M20"

    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. #Samsung #galaxym20



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த ஸ்மார்ட்போனின் கான்செப்ட் ரென்டர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    புதிய ரென்டர்களில் புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போன் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்20 என அழைக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் SM-M205 என்ற மாடல் நம்பருடன் உருவாகி வருவதாக வலைத்தளத்தில் இடம் பெற்றிருந்த தகவல்களில் தெரியவந்தது.


    புகைப்படம் நன்றி: 91Mobiles

    சாம்சங் கேலக்ஸி எம்20 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் 7885 14 என்.எம். பிராசஸர்
    - மாலி-G71 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ, எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இங்கிலாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், போலாந்து மற்றும் ஸ்காந்திநேவிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30 மற்றும் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
    ×