search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "santhanu hazarika"

    • 2019 ஆம் ஆண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனு ஹசாரிகாவும் பழகி டேடிங் செய்தனர்.
    • இந்நிலையில் 4 ஆண்டுகள் தொடர்ந்த ரிலேஷன்ஷிப் இப்பொழுது முறிவடைந்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஸ்ருதிஹாசன். 7 ஆம் ஆறிவு, 3 ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    சமீபத்தில் இவர் இசையில் கமல்ஹாசன் எழுதிய பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் 'இனிமேல்' என்ற ஆல்பம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இசையில் மிகவும் ஆர்வமிக்கவர் ஸ்ருதிஹாசன்.

    2019 ஆம் ஆண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனு ஹசாரிகாவும் பழகி டேடிங் செய்தனர். விருது வழங்கும் விழாக்களுக்கு எல்லாம் ஒன்றாக சென்றனர். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிடுவார். 4 ஆண்டுகள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகள் தொடர்ந்த ரிலேஷன்ஷிப் இப்பொழுது முறிவடைந்துள்ளது.

    இருவரும் அவர்களின் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்தனர். ஸ்ருதிஹாசன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாந்தனுவுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளார்4 ஆண்டுகள் பிறகு பிரிந்த ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா

    . அதைத் தொடர்ந்து தற்காலிகமாக சமூக வலைதளங்கலில் இருந்து ஒரு பிரேக் எடுத்துள்ளார். அவர் கடைசியாக பகிர்ந்த பதிவில் என்னை பற்றியும் , மக்களை பற்றியும் நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×