search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search operation"

    • பிப்ரவரி 27லிருந்து ஸாஹில், அவர் பணியாற்றி கொண்டிருந்த கப்பலிலிருந்து காணாமல் போனார்
    • கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது

    இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போனார்.

    கடந்த மாதம் 27லிருந்து காணாமல் போனதாக கூறப்படும் "ஸாஹில் வர்மா" (Sahil Verma) எனும் அந்த கடற்படை வீரரை தேட, உயர்-மட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்கு மண்டல ஆணைய (Western Naval Command) தலைமையகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வ எக்ஸ் (X) வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

    கடற்படையின் இரண்டாம் நிலை வீரராக (Seaman II) பணிபுரிந்த ஸாஹில் வர்மா, 2024 பிப்ரவரி 27 அன்றிலிருந்து தான் பணியாற்றி வந்த இந்திய கடற்படை கப்பலிலிருந்து துரதிர்ஷ்டவசமாக காணவில்லை.


    தகவல் அறிந்ததும் உடனடியாக இந்திய கடற்படை, கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    இச்சம்பவம் குறித்த விசாரணையை, கடற்படை வாரியம் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு கடற்படை தெரிவித்துள்ளது.

    தற்போது வரை கடற்படை வீரர் ஸாஹில் சர்மா, காணாமல் போன பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். #Pulwama #HizbulMilitants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் ஜன் மொகமது ஷேக் மற்றும் நசிர் உல் இஸ்லாம் என்ற ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 



    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    #Pulwama #HizbulMilitants
    தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற மாணவி மாயமாகி 77 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரை தேடும் பணியில் 500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டுதுறையை சேர்ந்தவர் ஜேம்ஸ். தோட்ட தொழிலாளி. இவரது மகள் ஜேஸ்னா (20). இவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சர பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி ஜேஸ்னா தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜேம்ஸ் கோட்டயம் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் கல்லூரி மாணவி இறந்து கிடப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் ஜேஸ்னாவாக இருக்கலாம் என கருதிய கேரள போலீசார் ஜேம்ஸ் மற்றும் அவரது உறவினர்களை அழைத்து கொண்டு செங்கல்பட்டு சென்றனர். ஆனால் பிணமாக கிடந்தவர் ஜேஸ்னா இல்லை என தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் ஜேம்ஸ் குடும்பத்தினர் கேரளா திரும்பினார்கள். தனது மகள் மாயமானது குறித்து ஜேம்ஸ் கோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    மேலும் கேளரள முதல்-மந்திரி, டி.ஜி.பி. ஆகியோரிடமும் புகார் அளித்து இருந்தார்.

    மாயமாகி 77 நாட்கள் ஆகியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தேடும் பணிக்கு சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 4 டி.எஸ்,பி.க்கள், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் என மொத்தம் 500 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் இன்று முதல் மாணவியை தேடும் பணியை தொடங்கினார்கள். மாணவி ஜேஸ்னா மாயமாகும் முன் தனது தோழிக்கு செல்போனில் தகவல் அனுப்பி உள்ளார். அதில் நான் மரணம் அடைய போகிறேன் என தெரிவித்து உள்ளார்.

    இந்த தகவல் இன்று தான் சைபர் கிரைம் போலீசார் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாணவியை தேடும் பணியில் சிறப்பு குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    மாணவி மரணம் அடைய போவதாக தகவல் அனுப்பி இருந்ததால் கோட்டயம், இடுக்கி, பத்தனம் திட்டா மாவட்டங்களில் உள்ள ஆறு, கடல், வனப்பகுதி, பாழடைந்த கிணறுகள், குளம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ×