search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "second level counselling"

    மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NeetCounselling
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக ஒரே நுழைவுத்தேர்வாக நீட் அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்றளவும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மேலும், நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளால் மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற மிகவும் சிரமம் அடைகின்றனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. அதில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவு குறித்து முறையீடு செய்ய இருப்பதாக சி.பி.எஸ்.சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வந்த எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி தனியார் கல்லூரிகளில் நடைபெற இருந்த நிர்வாக ஒதுக்கீட்டுகான கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NeetCounselling
    ×