என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "security review"
- பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.
- பார்வையாளர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு பரிசோதனை நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் உள்ளே குதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாராளுமன்றத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
அந்த வகையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அதிநவீன உடல் ஸ்கேனிங் இயந்திரத்தை அமைக்கவும், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதிக்க முடியாத வகையில் கண்ணாடி சுவர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன் பார்வையாளர்கள் உட்படுத்திகொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பார்ப்போம்:
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட விரும்பும் எந்தவொரு நபரும் மூன்றடுக்கு பாதுகாப்பு பரிசோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன், பார்வையாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
ராஜ்யசபா செயலகத்தால் வெளியிடப்பட்ட பார்லிமென்ட் பாதுகாப்பு சேவையின் அலுவலக நடைமுறையின் பிரிவு கையேடு (SMOP) படி அவர்களின் உடைமைகளை சரிபார்க்க வேண்டும். தொலைபேசிகள், பைகள், பேனாக்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாணயங்கள் கூட அனுமதிக்கப்படாது. மேலும் அவர்கள் தங்கள் ஆதார் அட்டையையும் காண்பிக்க வேண்டும்.
இரும்புக் கதவுகளிலிருந்து பாராளுமன்றப் பகுதிக்குள் நுழைவதில் இருந்து செயல்முறை தொடங்குகிறது. அதன்படி பார்வையாளர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் பொருளை வைத்துள்ளார்களா என்பதை கண்டறிய உலோகக் கண்டறிவி மூலம் சோதிக்கப்படுவர்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு சோதனையின் இரண்டாம் நிலையில், பார்வையாளர்கள் அனைவரும் அனுமதி பெற்றதன் அடிப்படையில்தான் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுள்ளனர் என்பதை ஊழியர்கள் உறுதி செய்கிறார்கள்.
பார்வையாளர்களின் அனைத்து பைகள்/சுருக்கப் பெட்டிகளும் பேக்கேஜ் ஸ்கேனர்கள் மூலம் திரையிடப்படும். இதனை அங்கிருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் உறுதி செய்வார்கள். இந்த செயல்முறைக்குப் பிறகுதான், பார்வையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
பாராளுமன்றத்தில் அனுமதி பெறுவதற்கான நடைமுறை:
- பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச்சீட்டுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஒரு பாராளுமன்ற உறுப்பினர் காகித விண்ணப்பத்தைப் பயன்படுத்தி அல்லது டிஜிட்டல் சன்சத் இணையதளம் மூலம் அனுமதிச்சீட்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு அனுமதிச்சீட்டுக்கும் ஒரு தனிப்பட்ட ஐடி உள்ளது.
- பார்வையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கையொப்பமிடப்பட்ட தங்கள் நுழைவை பரிந்துரைக்கும் கடிதங்களைக் காட்ட வேண்டும்.
- பார்வையாளரின் அனுமதிச் சீட்டுகள் பொது கேலரிக்குள் நுழைந்தவுடன் பாதுகாப்பு ஊழியர்களால் மீண்டும் சரிபார்க்கப்படும். அலுவல்பூர்வ பாதுகாப்பு நடைமுறைக் கையேட்டின்படி, பார்வையாளர்களை பாதுகாப்புப் பணியாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.
பார்வையாளர்கள் அனுமதியின்றி பாராளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்