என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Selvaganapathy"
- 1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி.
- செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சென்னை:
1991-ம் ஆண்டு முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 1995 மற்றும் 1996-ம் ஆண்டு களில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த டி.எம்.செல்வ கணபதி சுடுகாடுகளுக்கு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாயை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்திய மூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்ப ளித்தது. அதேசமயம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டில் மேல்மு றையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, குற்றவாளிகள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் ஒன்றரை ஆண்டிற்கு பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சி.பி.ஐ. திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு என்பதால், தீர்ப்பை ரத்து செய்து தங்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.
சி.பி.ஐ. தரப்பில், மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது, 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகாடுகளுக்கு மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது, அதிலும் தலா 23 லட்சம் ரூபாய் தொகையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 17 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என வாதிடப்பட்டது. எனவே சிறப்பு நீதிமன்ற தண்ட னையை உறுதிசெய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் அனைவரையும் தண்டிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 9-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து வழக்கு மீதான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த மேல்முறையீடு வழக்குகளில் இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
தற்போது செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
- பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-
- கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.
புதுச்சேரி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-
கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.
கொள்முதல் மையங்கள் உணவு தானியங்களை விலைக்கு வாங்கும்பொழுது இழப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஒரு கவலைக்குரிய செய்தி ஆகும். துரதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மழைக் காலங்களில் ஆயிரக்கணக்கில் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் குவிக்கப் பட்டுள்ளன.
கொள்முதல் மையங்களில் குறைந்த செலவில் கொட்டகைகளை நிறுவுவதன் மூலம் இத்தகைய இழப்பை எளிதில் தவிர்க்கலாம். இதன் மூலம் அரசுக்கு அதிக நிதிச்சுமை இல்லாமல் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும்.
எனவே,கொள்முதல் மையங்களில் சேமிப்பு வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு மூலம் கிடங்குகளையும் குளிர்பதனக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவையிலிருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் பயணத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
- ஆகவே புதுவையில் குறிப்பாக உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் வணிகம் மிகவும் பாதிக்கப்படுவதாக உணவு விடுதிகள் சங்க நிர்வாகிகள் ெதரிவித்தனர்.
புதுச்சேரி:
பாராளுமன்றத்தில் புதுவை எம்.பி. செல்வகணபதி பேசியதாவது:-
புதுவையிலிருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் பயணத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
முன்பு அளிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர் 2019-க்குள் பணியை முடிக்காததால், சுற்றுலா பயணிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் இருந்தது.
இதற்காவே அவர்கள் வேலூர் வழியாக 70 கி.மீ கூடுதலாக பயணிக்க வேண்டியதால் எரிபொருள், நேரம், விரயமாகிறது.
ஆகவே புதுவையில் குறிப்பாக உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் வணிகம் மிகவும் பாதிக்கப்படுவதாக உணவு விடுதிகள் சங்க நிர்வாகிகள் ெதரிவித்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி பதில் அளிக்கும் போது இந்த இரண்டு வழி சாலை போடும் பணிகள் கொரோனாவின் 2 அலைகளால் தாமதமாகி விட்டன. ஆனாலும் புதிய ஒப்பந்ததாரர் மூலம் வரும் ஆண்டு மே மாதத்திற்குள் சாலை பணி முடியும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்