என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » seven killed
நீங்கள் தேடியது "Seven killed"
தெலுங்கானாவில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். #Telangana #AutoAccident
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தில் உள்ள கோடட் நகரை சேர்ந்தவர்கள் ஒரு ஆட்டோவில் தம்மரா கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் நடந்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினர். அவர்களது ஆட்டோ கோடட் பகுதியில் சென்றபோது, ஆட்டோ டிரைவர் முன்னால் சென்ற ஒரு லாரியை வேகமாக முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். காயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். #AfghanistanBlast #PulECharkhiPrison
காபூல்:
இதில், சிறைச்சாலை வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. வாகனத்தினுள் இருந்த 7 ஊழியர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிறைச்சாலை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanistanBlast #PulECharkhiPrison
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காபூல் நகரில் உள்ள புல்-இ-சார்க்கி சிறைச்சாலை ஊழியர்கள் இன்று காலை பணிக்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் காலை 7.30 மணியளவில் சிறைச்சாலையின் பிரதான வாயிலை நெருங்கியபோது, திடீரென அந்த வாகனத்தை நோக்கி வந்த ஒரு பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இதில், சிறைச்சாலை வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. வாகனத்தினுள் இருந்த 7 ஊழியர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிறைச்சாலை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanistanBlast #PulECharkhiPrison
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதிய கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Karimnagaraccident
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று வராங்கல் மாவட்டத்திலிருந்து கரீம்நகருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தானது கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள செங்கர்லா கிராமத்திற்கு அருகில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் கே.சந்திரசேகர் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனஉறுதியளித்தார். #Karimnagaraccident

மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் பயணம் செய்த கார் குளத்தில் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். #BengalCarAccident
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் மாவட்டத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் ஒரு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். துபாமாரி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஜிரன்பூரில் சென்றபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியது.
இதில் காருக்குள் இருந்த 5 வயது குழந்தை உள்பட 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தண்ணீரின் அடிப்பகுதிக்கு கார் சென்றுவிட்டதாலும், இருட்டு நேரம் என்பதாலும் உடனடியாக அவர்களை மீட்க முடியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் வடக்கு தினஜ்பூன் காலாகாச் பகுதியில் போலீஸ் வேனும் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதியதில் 31 பேர் காயமடைந்தனர். #BengalCarAccident

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MassShooting
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஆஸ்மிங்டன் நகரம். இங்குள்ள ஒரு வீட்டின் வெளியே இரண்டு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு 7 பேரின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதில் நான்கு குழந்தைகளும் அடக்கம்.
தொடர்ந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்கள் என்ன காரணத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #MassShooting
×

X