search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sha rukh khaan"

    • நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும்.
    • இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை குவித்தது ஜவான்.

     அட்லீ குமார் தனது 19வது வயதில் சங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    இதைஅடுத்து, ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    புதுடெல்லியில் நேற்று 'NDTV-ன் இந்தியன் ஆஃப் தி இயர்' விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் ஜவான் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருதை அட்லீ வென்றார். மத்திய அமைச்சரான ஹர்தீப் புரி அட்லீக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த விழாவில் ஜவான் படம் ஷாருக்கனை வைத்து இயக்க தோன்றியது ஏன் என்ற கேள்விக்கு," ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய நடிகர். "க்ளோபல் ஐகான்" அவரை வைத்து சமூக கருத்து நிறைந்த ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தேன்" என்றார் அட்லீ.

    பின் அட்லீ 2019 ஆம் ஆண்டில் ஷாருக்கானை சந்தித்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார்.

    "நானும் ஷாருக்கான் சாரும் 2019 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு சென்றோம். சென்னை சூப்பர் கிங்க்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைப்பெற்றது. அப்போது, நானும் ஷாருக்கான் சாரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்கள் சில பேர் மட்டும்தான்.

    அதை விமர்சித்தவர்கள் தான் நிறைய பேர். ஷாருக்கானுடன் சேர்ந்து எப்படி இவனால் படம் எடுக்க முடியும்? இவன் சரியானவனா, அவர் முன்னாடி நிற்கும் தகுதி இவனுக்கு இருக்கா ? என பலப்பேர் விமர்சித்தனர். அவர்களுக்கான பதில் தான் இந்த விருது. அனைத்து ஹேட்டர்ஸ்க்கும் நன்றி" என தெரிவித்தார்.

    மேலும்," நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும். யாருக்காகவும் உங்கள் கனவை விட்டு கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நோக்கி பயணியுங்கள்" என்றார் அட்லீ.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×