என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siddharth shankar"

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன் -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை சித்தார்த் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஷங்கர் இயக்கத்தில் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியானது.
    • இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான , இப்படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நேர அளவு காரணமாக சில நாட்களுக்கு முன் குறைக்கப்பட்டது.

    படம் வெளியாகி 3 நாட்கள் முடிவடைந்த நிலையில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிகளவு வசூல் செய்து இத்திரைப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×