search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sindhu province"

    • பாகிஸ்தானில் 2 சதவீதம் பேர் மட்டுமே இந்து மதத்தை சேர்ந்தவர்கள்
    • மனிஷாவின் சகோதரிகளும் சகோதரனும் மருத்துவ கல்வி பயில்கின்றனர்

    1947ல் ஒன்றுபட்ட இந்தியா சுதந்திரமடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானது.

    இந்தியாவில் மதசார்பின்மை கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு நாடாகும். அங்கு 96.47 சதவீதம் மக்கள் இஸ்லாமிய மதத்தவர்கள்; 2.14 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதல் பெண் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) பதவிக்கு 26 வயதான இந்து மதத்தை சேர்ந்த பெண் மனிஷா ரொபேடா (Manisha Ropeta) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தனது இந்த அரிய சாதனை குறித்து பேசிய மனிஷா, "பெண் என்னதான் கடினமாக படித்தாலும் மருத்துவப்பணி அல்லது ஆசிரியை பணியில் மட்டுமே செல்ல முடியும் என்பதை சிறு வயது முதலே நான் கேட்டு வந்துள்ளேன். காவல்துறையிலும், நீதிமன்றங்களிலும் பெண்கள் பணியாற்ற கூடாது எனும் நம்பிக்கையை தகர்ப்பதே எனது லட்சியமாக இருந்தது. பல குற்றங்களில் பாதிக்கப்படுவது பெண்ணினம்தான். சமுதாயத்தில் உள்ள பெண்களை காக்கும் விதமாக ஒரு பெண் பாதுகாவலர் தேவை என நினைத்ததால் காவல்துறையில் சேர்ந்தேன். நான் கடந்து வந்த பாதை எளிதானதாக இல்லையென்றாலும் எனக்கு பலரும் ஊக்கம் அளித்தனர்" என கூறினார்.

    சிந்து மாகாணத்தின் ஜேக்கபாபாத் பகுதியை சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் மனிஷா. மனிஷாவிற்கு 3 சகோதரிகளும் 1 சகோதரரும் உள்ளனர். அவரது தந்தை இறந்ததும், அவரது தாயார், தனது குழந்தைகளுடன் கராச்சி நகருக்கு இடம்பெயர்ந்தார்.

    மனிஷாவுடன் உடன் பிறந்தவர்கள் அனைவரும் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். மனிஷாவும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதி ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடத்தை தவற விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிந்து மாகாண பொது சேவைகளுக்கான ஆணையம் நடத்தும் தேர்வுகளில் 468 தேர்வாளர்களில் 16-வது இடத்தை பிடித்து காவல்துறையில் இந்த உயர் பதவிக்கு வந்தவர் மனிஷா. 

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HeatstrokeinPakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லால் ஷாபாஸ் கலாந்தர் பகுதியில் நடைபெற்ற ஆண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    பாகிஸ்தானில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பலர் வெயிலின் தாக்குதலுக்கு ஆளாகினர்.



    சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல் கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. #HeatstrokeinPakistan 
    ×