search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூளைமேடு"

    சூளைமேட்டில் மதுபான பாரில் மோதலில் ஆட்டோ டிரைவருக்கு கத்தியால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு அண்ணாநெடும் பாதையை சேர்ந்தவர் மணிகண்டன். (வயது32). ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் நேற்று இரவு 7 மணி அளவில் அங்குள்ள ஒரு பாரில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

    அப்போது நண்பர்களுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. போதைஅதிகமான மணிகண்டனை அவரது நண்பர்கள் அருகில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக கத்தியால் வெட்டி மது பாட்டிலால் தாக்கினார்கள்.

    அவரது தலையிலும், கைகளிலும் வெட்டு காயம் விழுந்தது. அவர் அங்கிருந்து தப்பி ஓடி வந்து ஜோதி ராமலிங்கம் தெருவில் விழுந்துள்ளார்.

    இதைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் என்பவரை கைது செய்தனர். வெள்ளை ராஜேஷ், வாட்டர் சர்வீஸ் ராஜேஷ், பிரசாத், செல்லா, சின்ன செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே எழும்பூர் தென்சாலையில் உள்ள மதுபாரில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த இப்ராகிம் தகராறு செய்து மதுபாட்டில்களை உடைத்துள்ளார். நண்பர்களோடு சேர்ந்து மது குடித்த அவர் அதிகமாக பில் போடப்பட்டுள்ளதாக கூறி பார் ஊழியரான லிங்கேஸ்வரனை கன்னத்திலும் ஓங்கி அறைந்துள்ளார்.

    இதுபற்றி எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போதையில் தகராறு செய்த இப்ராகிமிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சூளைமேட்டில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு பாரி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னி வீட்டு வேலை செய்து வருகிறார். மகள் பிரியா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலையில் ராமகிருஷ்ணன் அவரது மனைவி, மகள் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் ராமகிருஷ்ணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூளைமேட்டில் ரவுடி தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தினேஷ்குமார் தனது நண்பரை பார்க்க சூளைமேடு பகுதிக்கு வந்தார்.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் தினேஷ்குமார் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    தி.மு.க. கவுன்சிலர் கோபி, மயிலாப்பூரை சேர்ந்த ரவுடி மகேஷ் ஆகிய 2 பேரை கொலை செய்த வழக்கு ரவுடி தினேஷ்குமார் மீது உள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளும் அவர் மீது உள்ளன. அது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    சூளைமேட்டில் நிமோனியா காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை சூளைமேடு காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது 1½ வயது மகள் சிவஸ்ரீ.

    கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.

    காய்ச்சல் தீவிரமானதால் நேற்றிரவு எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் எழும்பூர் குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மருத்துவ மனையின் இயக்குனர் அரசர் சீரளாளர் கூறியதாவது:-

    “குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. குழந்தையின் நுரையீரலில் சளி பாதிப்பு அதிகமாக இருந்ததால் சுவாசிக்க முடியாமல் உயிர் இழந்துள்ளது. குறித்த நேரத்தில் வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்.

    பல இடங்களுக்கு சென்றுவிட்டு நோய் பாதிப்பு முற்றிய நிலையில் வந்ததால் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

    நிமோனியா காய்ச்சலில் உயிர் இழந்த குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். டெங்கு பாதிப்பால்தான் தங்கள் குழந்தை இறந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ×