என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிற்பி திட்டம்"
- சிற்பி திட்டத்தில் 100 பள்ளிகளில் இருந்து 8-ம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்கள், 2,236 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் நோக்கமாகும்.
மாணவர்களுக்கு சிற்பி திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சிற்பி திட்டம் ரூ.4.25 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.9.2021 அன்று சட்டசபையில் அறிவித்தார். காவல்துறையுடன் மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து அவர்களை சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயமாக மாற்றுவது; பயங்கரவாதம், வகுப்புவாதம், போதை பழக்கம், குடிப்பழக்கத்துக்கு எதிரான மாணவர்களாக உருவாக்குவது; இயற்கையை நேசித்து பாதுகாப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும். பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் இது வழிகாட்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள், யோகா போன்றவையும் கற்றுக்கொடுக்கப்படும்.
மேலும், குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதற்கான முக்கிய காரணங்களான, குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவற்ற நிலை, வேலைவாய்ப்பின்மை ஆகிய அவலங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து, அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
தான் கற்ற கல்வியையும், ஒழுக்கத்தையும் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அவர்களை வளர்ப்பதற்கு ஒரு வழிகாட்டியாக, காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவாக சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள 100 அரசு பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் சுய விருப்பத்தின்படி தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு சமுதாய பிரச்சினைகளை களைவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுய ஆளுமைத்திறனை மேம்படுத்துவது, இளம் வயதிலேயே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் மனநிலையை கொண்டுவருவது, தேசிய சின்னங்களை மதிப்பது ஆகியவை கற்றுத்தரப்படும்.
தற்போது சிற்பி திட்டத்தில் 100 பள்ளிகளில் இருந்து 8-ம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்கள், 2,236 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒருங்கிணைப்பு அதிகாரி முன்னிலையில் சிற்பி மாணவ, மாணவிகள் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை போலீஸ் அதிகாரிகள், நிபுணர்கள் நடத்துவார்கள்.
அவர்களுக்கான புத்தகம் வழங்கப்படும். வகுப்பு நடக்கும் நேரத்தில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு சிற்பி மாணவ, மாணவிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு, கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக, விளையாட்டு பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக்கொடுக்கப்படும்.
கண்டுகளித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நல்ல அனுபவங்கள் குறித்து பிறருக்கு கற்றுத்தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க சிற்பி சிறப்பு வகுப்புகள் உதவும். அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும். மொத்தத்தில் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் நோக்கமாகும்.
- காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட குற்றமே நிகழாமல் தடுக்கப்படும்.
- சிற்பி என்கிற இந்த திட்டம் பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்.
சென்னை:
சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதன்படி, சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில், 'சிற்பி' என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்தது.
குறிப்பாக, சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களைக் கொண்டு இந்த சிற்பி திட்டத்தை சென்னை மாநகர காவல் துறை செயல்படுத்துகிறது.
இத்திட்டப்படி, 8-ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசர கால எண்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவூட்டுவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்களின் தகவல்களை பெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிற்பி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப மக்கள் அனைவரும் காவல்துறை நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எல்லோருடைய எண்ணமும் அப்படித்தான் இருக்கும்.
காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் என்பதே எல்லோருக்கும் தெரியும்.
அந்த வகையில் மக்களையும், காவல்துறையையும் ஒன்றிணைக்க கூடிய எத்தனையோ திட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி நடைமுறையில் இருக்கக் கூடிய திட்டங்களை போல இது ஒரு முக்கியமான திட்ட மாக சிற்பி என்ற புதிய முன்னெடுப்பை தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு உருவாக்கி இருக்கிறது.
இதனுடைய பொருள் ஸ்டூடன்ட்ஸ் இன். ரெஸ்பான்சிபிள் போலீஸ் இனிசியேட்டிவ் (எஸ்.ஐ.ஆர். பி.ஐ.) என சிற்பி என்று இந்த திட்டத்துக்கு பெயரை சூட்டி, அதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை, பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிற்பி என்கிற இந்த திட்டம் பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கக்கூடிய திட்டம். இந்த திட்டத்தை கடந்த 13.9.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன். அறிவித்த நேரத்தில் சொன்னேன். ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக நான் அறிவித்தேன்.
சென்னை மாநகரில் உள்ள 100 அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் பங்கேற்கக்கூடிய வகையில் இந்த திட்டம் இன்று நிறைவேற்றப்படுகிறது. சிறுவர்களை இளமை காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூக பொறுப்பு உள்ளவர்களாகவும் ஆக்க இந்த திட்டம் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறது. சிறார், குற்ற செயல்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருமானம் இல்லாமை, ஆதரவு இல்லாமை, வேலை வாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.
வளர்ச்சி என்பது ஒரு புறம் இருந்தாலும் இன்று மற்றொரு புறம் சில சமூக பிரச்சினைகள் அதிகமாகி வருவதை நாம் கவனித்தாக வேண்டும். அதை தடுத்தாக வேண்டும்.
போதை பொருள் ஒழிப்பு, குடி பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச்செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமைத்திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களின் பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களுடன் தொடர்பு, இளம் வயதில் இருந்தே போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமையடைய செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களுக்கு உருவாக்கியாக வேண்டும்.
இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக தலை சிறந்து விளங்குவார்கள். அதாவது சிற்பியை போல நாம் மாணவர்களை சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும். இது குறித்து காவல்துறையினர், உயர் அதிகாரிகளுடன் சில தகவல்களை கேட்டேன். இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறீர்கள் என்று கேட்டேன்.
அவர்கள் சொன்னார்கள் இந்த செயல்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ-மாணவிகள் அப்பள்ளியின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் முன்னிலையில் கூடுவார்கள். மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை காவல்துறை அதிகாரிகளும், துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இது தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் ஒன்று வழங்கப்படும்.
இந்த வகுப்புகள் நடைபெறும் தருணங்களில் மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும். மேலும் இம் மாணவ-மாணவிகள் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் என்னிடத்தில் சொன்னார்கள். அதை கேட்டவுடன் எனக்கு மன நிறைவு அளிப்பதாக இருந்தது.
ஏடு தூக்கி பள்ளியில் இன்று பயிலும் பையனே நாடு காக்கும் தலைவனாய் நாளை விளங்கப்போகிறாய் என்று குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா பாடினார். அத்தகைய எதிர்காலத்தை நம்முடைய சிறுவர்களை சமூக ஒழுக்கம் உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டியது நம்முடைய கடமை. அவர்களை சிறப்பாக செதுக்கியதாக வேண்டும். அப்படி உருவாக்கக்கூடிய இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள். செதுக்குவார்கள். இந்த பயிற்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக்கூடாது. அவர்களின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக்கூடாது.
எந்தவிதமான புகாரும் வராமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நான் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லொழுக்கம் கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதன் மூலமாக நல்ல தலைவர்களை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்