என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அங்குரார்ப்பணம்"
- இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
- மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாலை புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் சாஸ்திர பூர்வமாக புண்யாவதனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகமும் நடக்கிறது. இதனால் இன்று கோவிலில் நடக்க இருந்த நித்ய கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- புண்யாஹவச்சனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்தது.
- புற்று மண் எடுத்து சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்புப்பூஜைகள் செய்து அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புண்யாஹவச்சனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்தது.
அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 8.40 மணியில் இருந்து காலை 9 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
- பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது.
- கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) காலை 8.54 மணிக்கு மீன லக்னத்தில் நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முறையே காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரையில் வாகன சேவைகள் நடக்கின்றன.
பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பண உற்சவம் நேற்று மாலை நடந்தது. கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதில் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்