என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷேப் கருவி"
- புவியில் உள்ள உயிர் வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும்.
- இஸ்ரோ, அதன் முழுப் பயனைப் பெறுவதற்காக, தொகுதிக்கு ஷேப் கருவியை சேர்த்தது என்பது குறிப்பித்தத்தக்கது.
பெங்களூரு:
நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் உறக்க நிலையில் இருந்து இன்னும் விழிக்கவில்லை. அதற்கான வாய்ப்பு குறைவான நிலையில் அமாவாசை முடியும் வரை முயற்சி செய்து கொண்டே இருப்போம் என ஏற்கெனவே விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.
இந்த சூழலில் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை கலனுடன் ஏற்கனவே ஸ்பெக்ட்ரோ-போலரி மெட்ரி ஆப் ஹேபிடபிள் பிளானட் எர்த் (ஷேப்) என்ற ஆய்வுக்கருவி அனுப்பப்பட்டிருந்தது. இந்த கருவி நிலவை 52 நாட்களாக சுற்றி வருகிறது. இதுவரை அதன் செயல்பாடுகளில் போதுமான தகவல்களை அனுப்பியுள்ளது. இது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு புவி நோக்கி நிறமாலைக் கதிர்களை அனுப்பும். அதன்மூலம் புவியில் உள்ள உயிர் வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும். அதாவது, அந்த கதிர்களின் பிரதிபலிப்பைக் கொண்டு அங்கு கார்பன், ஆக்சிஜன் உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதை அறியலாம். எதிர்காலத்தில் பிற கோள்களிலும் இத்தகைய ஆய்வை நடத்தி அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய உதவும்.
இதன் ஆய்வு முழுமை அடையவும், கண்டுபிடிப்புகள் ஏதேனும் இருந்தால் அறிவிக்கப்படவும் பல மாதங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சந்திரயான்-3 உந்துவிசை தொகுதி, ஆரம்பத்தில் விக்ரம் மற்றும் பிரக்யான் அடங்கிய தரையிறங்கும் தொகுதியை சந்திரனுக்கு கொண்டு செல்வதற்கும், அதைச் செய்வதற்கு பொருத்தமான சுற்றுப்பாதையை அடைந்தவுடன் அதிலிருந்து பிரிப்பதற்கும் மட்டுமே திட்டமிடப்பட்டது. இருப்பினும், இஸ்ரோ, அதன் முழுப் பயனைப் பெறுவதற்காக, தொகுதிக்கு ஷேப் கருவியை சேர்த்தது என்பது குறிப்பித்தத்தக்கது.