search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்த்தால் வெற்றி நிச்சயம்"

    • ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.
    • ஆந்தையின் பார்வை திறன் மனிதனுடையதை விட ஐந்து மடங்கு அதிகம்.

    தீபாவளி தினத்தன்று ஸ்ரீ லட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அவளது வாகனமாகிய உல்லூ-ஆந்தையை சிறப்புடன் போற்றுகிறார்கள். வட இந்தியாவில் ஆந்தை ஒரு மங்களகரமான பறவை.

    தீபாவளி தின இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை அவர்கள் மிக மிக சுப சகுனமாக கருதுகின்றனர். மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும் போது ஆந்தை கண்ணில் பட்டால் போகும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என தீர்மானமாக நம்புகிறார்கள்.

    தீபாவளி தினம் என்றில்லை. சாதாரண நாளிலும் இரவில் அது ஒரு வீட்டில் வந்து அமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

    மேலும், வட இந்தியர்கள் அப்படி தம் வீட்டில் வந்து அமரும் ஆந்தை, குரல் எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் மிகவும் மனச்சஞ்சலம் அடைவார்கள். தீமை சம்பவிக்கலாமோ என அஞ்சுவர்.

    ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே பதுங்கி வசிக்க தொடங்கி, இரவு பகலாக குரல் எழுப்பினால் விரைவில் லட்சுமி தேவி அந்த வீட்டிற்கு வந்து நிரந்தரமாக தங்கப்போகிறாள் என்று பொருள். அல்லது அந்த வீட்டின் எல்லைக்குள் அமையும் கோவிலில் இப்படி நிகழ்ந்தால் அந்த பகுதி வாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படுமாம்.

    நம்மால் பகலில் மட்டுமே எதையும் காண முடியும். மாறாக ஆந்தையால் இரவில் மட்டுமே எதையும் காண முடியும். பெரிய தலை, அகன்ற முகம், கூரிய வளைந்த உறுதியான அலகு, அதை கண்டு எதையும் எளிதில் கொத்தி கிழித்து தின்றுவிட முடியும்.

    பெரிய கண்கள், அதில் ஆழமான கூறிய பார்வை, இரவில் நட்சத்திரங்களிடம் இருந்து கிடைக்கும் லேசான ஒளியும் ஆந்தையின் விழித்திரையில் விழும். ஆந்தையின் பார்வை திறன் மனிதனுடையதை விட ஐந்து மடங்கு அதிகம். அதன் விழிகள் அசைவதில்லை. கண் சிமிட்டாமல் எதையும் எப்போதும் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும்.

    பார்வையை மாற்ற தலையையே இரு பக்கமும் திருப்பும். பார்க்க கம்பீரமாக இருக்கும். உலகெங்கும் ஆந்தையில் ஏறத்தாழ 200 வகைகள். இந்தியாவில் மட்டும் 29 வகைகள். சில இடங்களில் ஆந்தைகள் சுபமானதாகவும், பல இடங்களில் அபசகுணமானதாகவும் மதிக்கப்படுகின்றன. மேல்நாட்டினர் இவற்றை மிகுந்த அறிவுள்ள பறவைகள் என்கின்றனர்.

    யார் ஆந்தையை எப்படி கருதினாலும் சரி, அதுவொரு நன்மை செய்யும் பறவை. தீபாவளியன்று லட்சுமி தேவி பூஜிக்கப்படுவதால், அந்த அன்னையின் வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.

    ×