search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம் கோர்ட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சரை அவதூறாகவும், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி., மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் எம்.பி. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    விசாரணையின் போது சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.

    • வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • 4 பேர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.


    இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    மேலும் நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் அம்மனு மீதான உத்தரவு தெரிவிப்பதற்காக நாளை (அதாவது இன்று) இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். மேலும் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

    ×