search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூடுல்ஸ் ரெசிப்பி"

    • நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
    • காய்கறி பொரியலுக்கும் எப்படி பயன்படுத்தலாம்.

    நூடுல்ஸ் செய்வதற்கான மாசாலா வீட்டிலேயே தயாரிக்கலாம். அதன் செய்முறை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

    நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேவேளையில் அதன் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை காய்கறி பொரியலுக்கும் பயன்படுத்தலாம். எப்படி செய்வது என்று காணலாம்.

    வீட்டிலில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்து இதை தயாரித்து விடலாம். பட்டை, சீரகம், கொத்தமல்லி விதை, மக்சள், பூண்டு, எண்ணெய், மிளகு ஆகிய இருந்தால் மட்டும் போதுமானது.

    கடைகளில் கிடைக்கும் மசாலா பொடிகளை வைத்தும் இதை தயாரிக்கலாம். இல்லையென்றால் வீட்டிலேயே பொடி தயாரித்து அதன் பிறகு நூடுல்ஸ் மசாலா தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்களில் 100கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கடாயில் எண்ணெய் இல்லாமல் சீரகம், பட்டை, கொத்தமல்லி விதை, மிளகு ஆகியவற்றை நன்றாக வதக்க வேண்டும். கரம் மசாலா தயாரித்து வைத்துகொள்ள வேண்டும், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக ஈரப்பத்தம் இல்லாமல் வதக்கி அதையும் பொடியாக தயாரிக்க வேண்டும்.

    இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, சீரகப் பொடி, மிளகுப் பொடி, சீரத்தூள், பட்டை தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், மிள்கு தூள், பூண்டு,வெங்காய தூள் எல்லாவற்றையும் சம அளவில் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்ளோதான். நூடுல்ஸ் மசாலா தயார். இதை உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், கோவக்காய் உள்ளிட்ட பொரியலுக்கு பயன்படுத்தலாம்.

    • சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
    • குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும்.

    சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ஒரு வித்தியாசமான உணவு. இதில், வேகவைத்த நூடுல்சுடன் சிக்கன் ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. பொதுவாக நூடுல்ஸ் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. நூடுல்சை பொரிப்பதால் கிடைக்கும் மொறுமொறுப்பான சுவை அவர்களை மேலும் கவரும். சைவ உணவு பிரியர்கள், கட்லெட் வடிவத்தில் வேகவைத்த உருளைக்கிழங்குடன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிடலாம்.

    சுவையான சிற்றுண்டியாக அமையக்கூடிய சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த நூடுல்ஸ் (உப்பு சேர்த்து) - 2 கப்

    வேகவைத்த சிக்கன்- ஒரு கப் (துண்டு போட்டு உப்பு சேர்க்கப்பட்டது)

    ரொட்டித்தூள் - அரை கப்

    சீஸ்- ஒரு கப்

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    நறுக்கிய இஞ்சி- ஒரு ஸ்பூன்

    பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்

    பூண்டு- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி, புதினா இலைகள்- தேவையான அளவு

    கரம் மசாலா தூள்- ஒரு ஸ்பூன்

    கருப்பு மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    சாட் மசாலா- ஒரு ஸ்பூன்

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    முட்டை-1

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்-தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் 2 கப் வேகவைத்த நூடுல்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், துருவிய மற்றும் வேகவைத்த சிக்கன், ரொட்டித் துண்டுகள், சீஸ், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு (விரும்பினால் இஞ்சி பூண்டு விழுதையும் பயன்படுத்தலாம்).

    வெங்காயம், சிறிது பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகுத்தூள், சாட் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சோயா சாஸ் மற்றும் உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்க வேண்டும்.

    இப்போது இந்த கலவையில் இருந்து கட்லெட்டுகளை உருவாக்கலாம். உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, நீங்கள் விரும்பும் அளவுக்கு கட்லெட்டுகளை உருவாக்கலாம்.

    பின்னர், உடைத்து ஊற்றிய முட்டையில் கட்லெட்டுகளை நனைத்து அவற்றின் மீது ரொட்டித்தூளை தூவ வேண்டும். அதன் பின் கட்லெட்டை மிதமான தீயில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

     இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ரெடி. சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு இது சுவையாக இருக்கும். பார்ட்டிகளில் பரிமாறுவதற்கு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் மிகவும் ஏற்றது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும். குழந்தைகளின் டிபன் பாக்சில் கொடுத்து அனுப்புவதற்கு நல்ல உணவாக இருக்கும்.

    ×