search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்"

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி விளையாடினர்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 16-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயியின் ஹூயின் ஹூய்-லின் ஜிக் யுன் இணையிடம் தோற்று நடையை கட்டியது.

    இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் மோதுகிறார்.

    • லக்‌ஷயா சென் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார்.
    • புதிய பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலில் அவர் நல்ல நிலைக்கு வரும் ஆவலுடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் இன்று தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    சமீபகாலமாக தனது சிறந்த நிலைக்கு திரும்பும் முயற்சியில் தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த சிந்து அண்மையில் தனது பயிற்சியாளர் குழுவை மாற்றினார். புதிய பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலில் அவர் நல்ல நிலைக்கு வரும் ஆவலுடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.

    அவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் சவாலை தொடங்குகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை, சீன தைபேயின் ஹூ யின் ஹூய்-லின் ஜிக் யுன் ஜோடியுடன் மோதுகிறது.

    ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), கோடாய் நராவ்கா (ஜப்பான்), பெண்களில் ஆசிய சாம்பியன் வாங் ஷி யி (சீனா), அகானே யமாகுச்சி (ஜப்பான்) போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள்.

    ×