என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 98700
நீங்கள் தேடியது "அண்ணாத்த"
யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டதாக இயக்குனர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திருப்பாச்சி படத்தோடு இப்படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வந்தனர்.
சமூக வலைதளங்களிலும் இப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில், அண்ணாத்த படத்தை விமர்சிப்பவர்களை இயக்குனர் பேரரசு கடுமையாக சாடி உள்ளார்.
அண்ணாத்த படத்தின் போஸ்டர்
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு வன்மத்தோடும், வக்கிரத்தோடும், நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது. சில யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது. இருந்தும் அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. பல இடங்களில் ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். பேனர், தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள். ரசிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் விமர்சனம்.
யாருக்கும் அஞ்சாமல் அநியாயத்தை தட்டிக்கேட்கும் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் இவர், தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார். வெளியூரில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வரும்போது திருவிழா போல் கொண்டாடுகிறார். இதேபோல் கீர்த்தி சுரேஷும் அண்ணன் மீது பாசமழை பொழிகிறார்.
உயிருக்கு உயிராக இருக்கும் தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு வழியாக மாப்பிள்ளையை கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் ரஜினிக்கு வந்த பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளித்தார்? கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் என்று திரையில் ஜொலிக்கிறார்.
தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணன் மீது பாசம், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
வழக்கறிஞராக வரும் நயன்தாரா, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ரஜினியுடன் நடிக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்து இருக்கிறார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வில்லனாக வரும் ஜெகபதி பாபு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினிக்கேற்ற கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. முதல் பாதியை ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக கொடுத்து இருக்கிறார். ஆனால், பெரிதாக எடுபடவில்லை. இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்பாக கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குனர், பிற்பாதியில் ரசிகர்களை கட்டிப் போட முயற்சி செய்திருக்கிறார். தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவோடு திரையில் பார்க்கும் போது கலர்புல்லாக இருக்கிறது.
மொத்தத்தில் 'அண்ணாத்த' ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சி உள்ளதால் வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
அண்ணாத்த படக்குழு
இதுதவிர, ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை 'அண்ணாத்த' திரைப்படம் பெற்றுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X