search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small plane crash"

    துபாய் விமான நிலையத்தின் அருகே குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை.
    துபாய்:

    துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான ‘ஹனிவெல்’லுக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர்.

    விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சில வினாடிகளில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    உடனே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை. அதே நேரத்தில் சில விமானங்கள் வேறு மார்க்கமாக இயக்கப்பட்டன. நிலைமை சீரடைந்ததும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    விமான விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #PlaneCrash
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

    விமானத்தை அதன் உரிமையாளரும், விமானியுமான ஜெப்ரே வெயிஸ் (வயது 65) இயக்கினார். அவருடன் இந்த விமானத்தில் 5 பேர் பயணம் செய்தனர்.

    இந்த விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் அந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் ஜெப்ரே வெயிஸ் உள்பட விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.  #PlaneCrash 
    நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் பறந்த சிறியரக விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். #NepalPlaneCrash

    நேபாள நாட்டின் சிமிகோட் பாஸ் மாகாணத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுர்க்ஹெட் விமானதளத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு காலை 6.12 மணியளவில் பறந்து சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த விமானி கிரன் பட்டாராய் மற்றும் துணை விமானி அதித்யா நேபாளி ஆகியோர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய துணை இயக்குநர் ஜெனரல் போக்ரேல் கூறியதாவது:-

    விபத்துக்குள்ளான மகலு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. மேலும், வானிலை மோசமாக இருந்த காரணத்தினால் சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. விமானத்தை இயக்கிச்சென்ற இரண்டு விமானிகளும் விபத்தில் பலியாகியுள்ளனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள பஹுங்ஹார் ஆற்றங்கரையில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #NepalPlaneCrash
    ×