என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Somato Untouchability"
- உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்
- முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன
சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இந்த சைவ அணி டெலிவரி செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தனது எக்ஸ் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.
அந்த பதிவில், உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, மற்றும் அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
சொமேட்டோவின் இந்த புதிய நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோ நிறுவனத்தை பலரும் புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன. குறிப்பாக எங்கள் உணவு தீட்டு பட்டு விட்டது என்று அவர்கள் அதற்கு காரணம் கூறினார்கள்.
இத்தகைய பிரச்சினைகளை களைவதற்கு முயற்சி எடுக்காமல், ஏற்கனவே இருக்கும் பாகுபாடுகளை அதிகரிக்கும் வேலைகளை சொமேட்டோ செய்து வருகிறது என்று நெட்டிசன்கள் இந்த புதிய நடவடிக்கையை விமர்சித்தனர்.
இந்நிலையில், சைவ உணவு பிரிவுக்கான பச்சை நிற உடை நடைமுறை படுத்தப்படாது, அதற்கு பதிலாக அனைவரும் இனி சிவப்பு நிற சீருடையே அணிவார்கள் என நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
ஆனால், சைவ உணவுகள் தனியாகவே டெலிவரி செய்யப்படும் எனவும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், சிவப்பு, பச்சை ஆகிய இருவேறு நிற உடையால் சில குடியிருப்புவாசிகள் அவர்களது உரிமையாளர்களின் அதிருப்திக்கு உள்ளாகலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களால் யாருக்கும் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தீபிந்தர் கோயல் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்