என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Some Places Rain In TN"

    • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
    • வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு.

    மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறினார். #Rain #MeteorologicalCentre
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கேரளா மாநிலத்திலும், கர்நாடகாவிலும் அளவுக்கு அதிகமாக கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பின. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது.

    இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும்’ என்றார்.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 4 செ.மீ., வால்பாறை 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலா பகுதியில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. #Rain #MeteorologicalCentre

    ×