search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Chakra Chariot"

    • இறைவனுக்கு கமடேஸ்வரர் என்று பெயர்.
    • லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்பதே கமடேஸ்வரர் என்பதன் பொருள்.

    இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு கமடேஸ்வரர் என்று பெயர். இப்பெயர் வந்த வரலாறு ஒரு புராணச் செய்தியை உள்ளடக்கியது.

    கைலையில் உமா, மகேஸ்வரன் இருவரில் அழகில் சிறந்தவர் யார் என்று சிவ பெருமான் தெரிந்துகொள்ள விரும்பினார். இக்கேள்விக்கு எந்த விடையை அளித்தாலும் அது இருவரில் ஒருவரை வருத்தப்படுத்தும் என்பதால் கேள்விக்கு விடையளிக்க ஒருவரும் முன்வரவில்லை.

    அதற்கு அவர் தான் ஏற்படுத்தியுள்ள ஒரு தாமரைத் தடாகத்திற்கு சென்று அதன் எழிலைக் கண்டு வருமாறு பின்னர் விடையளிப்பதாகவும் கூறினார். பெருமானும் இறைவியுடன் சென்று பார்த்தபோது அந்த சூழல் தவம் மேற்கொள்ளத் தகுந்த இடமாக தோன்றவே சிவபெருமான் அங்கமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இறைவி எழில் மிக்க அந்த சூழலால் கவரப்பட்டு அங்குள்ள மலர்களாலும் மற்றும் பட்டுத் துகிலாலும் தன்னை மேலும் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டாள்.

    இருவரும் புறப்பட்டு வரும் வழியில் பரப்ரம்மத்தால் சிருஷ்டிக்கப்பட்ட பெரியதொரு நிலைக்கண்ணாடியில் அவர்கள் தங்கள் உருவத்தை பார்க்க நேரிட்டது. அதில் பாம்பணி, சுடலைப்பொடி, வெள்ளெருக்கு மாலை, புலித்தோல் என்றிந்த விதமான தன் தோற்றத்தைக் கண்டவுடன் பரப்ரும்மம் எவ்வளவு அழகாகத் தம்மை தர்மசங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்பது புரிந்தது.

    பரப்ரம்மம் நிலையில்லாத அழகின்மேல் ஆசை கொண்ட மனம் அருவுருவமாக `லிங்க' வடிவில் அமைவதாக என்று கூறினார். கமம் என்றால் நிறைவு (தொல்காப்பியம் கூறும் பொருள்) ஆன்மாக்களுடன் அருவருவாய் லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்ற பொருளில் கமடேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    • தேர் திருவிழாவில் ஓர் சமுதாய தத்துவம் அடங்கியுள்ளது.
    • `விராட் விஸ்வ சொரூபமே எட்டு அடுக்காகும்'

    தேர் திருவிழாவில் ஓர் சமுதாயத் தத்துவம் அடங்கியுள்ளது. தேரையிழுக்க ஒருவரால் முடியாது. எனவே பலருடைய ஒத்துழைப்பும் முழுமையாக தேவை. சும்மா கையை வைத்து இழுத்தால் தேர் நகராது. பலரும் முழுமையாக செயல்பட்டாலும் பலரும் பல திசையில் இழுத்தாலும் தேர் நகராது.

    ஒருமுகப்பட்டு ஒரே திசையில் இழுக்க வேண்டும். ஆக அப்படி இழுத்தாலும் ஒரு நொடிப் பொழுதில் நிலையை அடைவதில்லை. காலம் தேவைப்படுகின்றது. அதுபோலவே, சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா கொண்டாடினர்.

    சென்னபுரி, ஸ்ரீகாளிகாம்பாள் ஸ்ரீ சக்ரத் தேர் மிகவும் அழகும் சக்தியும் வாய்ந்த திருத்தேராக காட்சியளிக்கின்றது. பிரம்மோற்சவத்தில் இரவில் ஒலிக்கும் வெண்கல ஓசை `ஓம் ஓம்' என்ற பிரணவ ஓசையை நம் செவியில் இனிய இசையாக ஒலிக்கும் என்பதை நேரில் கண்டவர் கூறுவர்.

    தேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும், யட்சர்களும் கின்னர்களும், கந்தருவர்களும் வசிப்பார்கள். உருத்திர கணிகைகளும், ரிஷிகளும் வசிப்பார்கள். இவர்களின் சிற்பங்கள் தேரின் அடிப்பாகத்தினைச் சுற்றிலும் இருக்கும். மேலும், பிரம்மா, விஷ்ணு, பரமசிவன், இந்திரன், சூரியன் இவர்கள் அதிதேவதைகளாக இருப்பர். தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்கு சமானம்.

    `விராட் விஸ்வ சொரூபமே எட்டு அடுக்காகும்' உச்சியில் இருக்கும் கலசம் சோடசாந்தம், அதற்கடுத்த கீழடுக்கு துவாத சாந்தம், அதற்கு அடுத்து கீழடுக்கு மத்தக ஸ்தானம், அடுத்த அடுக்கு புருவ மத்திய ஸ்தானம், நடுவில் தாங்கும் குத்துக் கால்கள் முன் மூன்று துளைகள் மூன்று கண்கள் பின்புறம் உள்ளது. சிகையும் இட, வலக் காதுகளும் ஆகும். இறைவன் எழுந்தருளும் கேடய பீடம் முகம்.

    குதிரைகள், சூரிய, சந்திர கலைகள் சாரதி அக்னி கனல் இவை நாசி (மூக்கு) ஆகும். அடுத்த கீழ் அடுக்கு கண்ட ஸ்தானம். அதையடுத்த கீழடுக்கு இருதய ஸ்தானம். அதற்கடுத்தது நாபி ஸ்தானம், அதை அடுத்து குண்டலி ஸ்தானம், சக்கரங்கள் தசவாயுக்கள், இறைவி இதற்கு கர்த்தா தான் ஒருத்தியே என்று வாயுக்கள் இறைவி இதற்கு கர்த்தா தான் ஒருத்தியே என்று உணர்த்தி இவ்வாறு அமைந்த பிண்டதத்வ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி அசைவற்ற மனதை உந்தி குண்டலினியில் இருந்து நாபிக்கும், நாபியிலிருந்து கண்டத்திற்கும் அதில் இருந்து வாய்க்கும் முறையே இரத குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண்கள் வழியாகவும் நடு வழியாகவும் மேல் நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவத்திற்கும் ஏற்றி வயப்பட்டு சும்மாயிருந்தபடி இருக்கும் நித்ய சுகியாய் இருந்திடல் வேண்டுமென்று லயக்கிரமத்தைக் காட்டுகிறது.

    மேலும் தேரானது திரிபுராதிகளை சிவன் சிரித்து எரித்து ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கு அறிகுறியாகவுள்ளது. இவ்வளவு தத்துவமுள்ள தேரில் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் வருவதை தரிசிப்பது அஷ்டலட்சுமி கடாட்சமும் கோடி புண்ணியங்களும் உண்டு.

    ×