search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka bombings"

    இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankaTerrorAttacks #SriLankaBombings
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில்  தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.



    ஈவு இரக்கமின்றி பொதுமக்களை கொன்று குவித்த, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 40 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLankaTerrorAttacks #SriLankaBombings
    நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார். #SriLankabombings #Christchurchattacks #RuwanWijewardene
    கொழும்பு:

    நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் 3 தேவாலயங்களை குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நிகழ்ந்தன. மேலும் 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 10 இந்தியர்கள் உள்பட 310 பேர் உயிரிழந்தனர்.



    இந்நிலையில், இந்த கோரச் சம்பவம் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்த அந்நாட்டின் ராணுவ மந்திரி ருவன் விஜேவர்தனே ‘நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளார். #SriLankabombings #Christchurchattacks #RuwanWijewardene 
    ×