search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri lanka vs south africa test series"

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் கருணாரத்னே சதத்தால் இலங்கை அணி 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும் தென்ஆப்பிரிக்கா ஸ்டெயின், ரபாடா, பிலாண்டர் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. இவர்களுடன் மகாராஜ், ஷாம்சி ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளரும் தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்திருந்தனர்.

    இலங்கை அணியின் குணதிலகே, கருணார்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக கறங்கினார்கள். குணதிலகே 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா 11 ரன்னிலும், மெண்டிஸ் 24 ரன்னிலும் வெளியேறினார். ரபாடாவின் அச்சுறுத்தலான பந்து வீச்சை எதிர்கொள்ள இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    அதன்பின் வந்த மேத்யூஸ் 1 ரன்னிலும், ஏஆர்எஸ் சில்வா டக்அவுட்டிலும் வெளியேற, இலங்கை அணி திணறியது. ஆனால், மற்றொரு தொடக்க வீரரான கருணாரத்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் அடித்தார். அவர் சதம் அடித்தாலும் இலங்கை அணியின் ஸ்கோர் உயர்ந்தபாடில்லை.


    4 விக்கெட் கைப்பற்றிய ரபாடா

    கடைநிலை பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு ரன்கள் குவிக்க முயற்சி செய்தார். கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கிய சண்டகன் 25 ரன்னில ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கருணாரத்னே 222 பந்துகள் சந்தித்து 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 158 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் சண்டகன் உடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக காலே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். ஷாம்சி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ×