search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka travel"

    • இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்ய பயணம்.
    • தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை.

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார்.

    இலங்கையில் புதிய அதிபர் அநுர குமர திசநாயக்க பதவியேற்றுள்ள நிலையில் இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்ய பயணம்.

    இருநாட்டு வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்தும் விதமாக ஜெய்சங்கர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி பயணம் செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா துறை மந்திரி தெரிவித்துள்ளார். #SriLankaVisa
    கொழும்பு:

    இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் தற்போது ‘விசா’ பெற்று சென்று வருகின்றனர். அந்த நடைமுறையை மாற்றி ‘விசா’ இன்றி பயணம் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இந்த தகவலை இலங்கை சுற்றுலா துறை மந்திரி ஜான் அமரதுங்கா தெரிவித்தார். இந்தியா மற்றும் சீன சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுகுறித்து ஆராய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஒரு குழு அமைத்துள்ளார் என்றும் அவர் கூறினார். #SriLankaVisa
    ×