search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st kitts and Navis Patriots"

    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் வெற்றி பெற்றன. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பார்படோஸ் டிரிடென்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் 35 பந்தில் 54 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல் டக்அவுட்டிலும், எவின் லெவிஸ் 1 ரன்னில் வெளியேறினாலும், பிராண்டன் கிங் 60 ரன்களும், டேவன் தாமஸ் 32 ரன்களும், பென் கட்டிங் 29 ரன்களும் அடிக்க 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது இர்பான் 4 ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும் மற்ற பவுலர்கள் அதிக ரன்கள் கொடுத்ததால் பார்படோஸ் அணி வெற்றியை இழந்தது.


    க்ளீன் போல்டாகும் லென்டில் சிம்மன்ஸ்

    மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா தல்லாவாஸ் ரோவ்மன் பொவேல் (64), டேவிட் மில்லர் (13 பந்தில் 32 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

    பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. வார்னர் 42 ரன்னும், பொல்லார்டு 46 ரன்னும், லென்டில் சிம்மன்ஸ் 45 ரன்னும் அடித்தாலும் செயின்ட் லூசியாவில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜமைக்கா தல்லாவாஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
    ×