search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stabbing attack"

    மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.

    இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறியதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    இஸ்ரேலில் அமெரிக்கர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீன வாலிபரை போலீசார் கைது செய்தனர். #IsraeliAmerican #StabbingAttack
    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலியர்களை கத்தியால் குத்தியும், கார்களை கொண்டு மோதியும் தாக்குதல் நடத்துவதை பாலஸ்தீனர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்ற அரி புல்ட் (வயது 45) என்பவர் நேற்று முன்தினம் ஜெருசலேம் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வணிக வாளகத்தில் நின்றுகொண்டிருந்தார்.



    அப்போது அங்கு பாலஸ்தீன வாலிபர் ஒருவர் அரி புல்ட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். எனினும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் அரி புல்ட் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து பாலஸ்தீன வாலிபரை சுட்டார்.

    இதில் பாலஸ்தீன வாலிபரின் உடலில் குண்டுபாய்ந்து சுருண்டு விழுந்தார். பின்னர் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் சிலர் ஓடி சென்று அவரை மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த அரி புல்ட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கல்வி சம்பந்தமாக வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள அரி புல்ட் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #IsraeliAmerican #StabbingAttack
    ×