என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stalin Birthday"

    • சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும் என கார்கே பேச்சு
    • அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:-

    என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும்.

    தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நாட்டில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த விரும்பியதை மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.

    எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ள இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை.

    தமிழ்நாடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பாஜக அரசியல் செய்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்திலும் பாஜக தலையீடு செய்து வருகிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என நான் தெரிவிக்கவில்லை. அது முக்கியமல்ல. நாம் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவிற்கு எதிரான இந்த போராட்டம் முக்கியமானது. நாம் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.
    • பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் தேர்தல் கணக்குகளை புரிந்துகொண்டு ஒன்றிணைய வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தலைவர்களின் வாழ்த்துரைக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

    ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உயிர்கள், உடன்பிறப்புகள் அடங்கி இருக்கிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் வந்தவன் நான். வீட்டுக்கு விளக்காக இருப்பேன், நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன்.

    இது எனது பிறந்தநாள் விழா மேடை மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கான மிகப்பெரிய மேடையின் தொடக்கமாகும். ஒரு பொதுவான மேடையை உருவாக்கி, சிறந்த பிறந்தநாள் பரிசை வழங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தல், யார் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதற்கான தேர்தல். 2024 தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி என்பதை நிராகரிக்கவேண்டும், அது கரை சேராது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் தேர்தல் கணக்குகளை புரிந்துகொண்டு ஒன்றிணைய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறவேண்டும். இந்த வெற்றிக்காக தொண்டர்கள் அனைவரும் இப்போதிருந்தே உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×