search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state election incharge"

    உத்தரப்பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெறும் என மத்திய மந்திரியும், உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ParlimentElection #BJP #PMModi #JPNadda
    லக்னோ:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தும் விதமாக முக்கிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவுசெய்தன. அதன்படி, மொத்தமுள்ள 80 தொகுதிகளில்  இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெறும் என மத்திய மந்திரியும், உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    உத்தரப்பிரதேசம் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், உ.பி.யில் 74 இடங்களில் வெல்வோம். கடந்த முறை ஜெயித்ததை விட கூடுதலாக ஒரு இடமாவது அதிகரிக்க வேண்டும். அதற்கான பணிகளில் கட்சி தொண்டர்கள் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சி இந்த வெற்றியை பெற்றுத் தருமென நம்புகிறேன் என தெரிவித்தார். #ParlimentElection #BJP #PMModi #JPNadda
    ×