search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stop Vaginal Itching"

    நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.
    நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.அது மட்டுமல்லாமல் உடலுறுவின் போது ஏற்படும் உராய்வினாலும் பிறப்புறுப்பில் வலி மற்றும் அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    நாம் அணியும் ஆடைகள் சருமத்தில் உரசும் போது ஏற்படும் பாதிப்பு ஷேஃப்டிங் என்று அழைக்கப்படுகிறது. இதனால் அரிப்பு, நமநமப்பு, எரிச்சல், வலி போன்றவை ஏற்படும். இந்த மாதிரியான ஷேஃப்டிங் பிரச்சினை தொடை இடுக்குகளில், அக்குள் பகுதிகளில், மார்பக காம்புகளில் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை அவ்வளவு சாதாரணமாக விட்டு விடவும் கூடாது. இதனால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு மற்றும் அசெளகரியமும் ஏற்படும். எல்லார் முன்னிலையிலும் சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.

    காரணங்கள்

    உடலுறுவின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் உராய்வு

    சுய இன்பம் காணுதல்

    இறுக்கமான உள்ளாடைகள்

    நாப்கின்

    அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல்.

    உடல் பருமன்

    கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் அரிப்பு, எரிச்சல், வறட்சி ஏற்படுதல்

    யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.

    அறிகுறிகள்


    பாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி, சரும பிளவுகள், சிவத்தல், தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை அறிகுறிகளாகும்.

    இயற்கை முறைகள்

    * சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறந்து விளங்குகிறது. இது ஒரு ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு தன்மை காலை கொண்டது. பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.

    * மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் கொண்டது. சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பை தீவிரம் ஆக்காமல் உடனடியாக குறைக்கிறது.

    1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.



    * வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. அதனால் தான் இது நிறைய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை சருமத்திற்கு வெளியேவும் உள்ளேயும் கூட பயன்படுத்தலாம்.

    யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.

    * கற்றாழை ஒரு மேஜிக் தாவரம் என்றே கூறலாம். இதன் ஜெல்லை யோனி பகுதியில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்பட்ட சரும வடுக்கள், எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகி விடும்.

    கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்

    தடுக்கும் முறைகள்

    இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.

    குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.

    நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.

    உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.

    பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.

    இந்த இயற்கை வழிகளை பின்பற்றி எளிதாக யோனிப் பகுதியில் ஏற்படும் அரிப்பை, சரும பிரச்சினைகளை சரி செய்யலாம். 
    ×