என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Substandard material"
- புதுவை சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை
- மோதிலால் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனத்தின் கணக்கை முடக்கியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் மோதிலால். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வந்த விலை குறைவாக மிகத் தரமாக இருப்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து 2 ட்ராக் பேண்ட்களை ஆர்டர் செய்தார்.
பொருள் வீட்டுக்கு வந்தவுடன் ரூ.ஆயிரத்து 100 பணத்தை கொடுத்து விட்டு கொரியரில் வந்த பார்சலை பிரித்து பார்த்தார்.
அவர் ஆர்டர் செய்த பேன்டிற்கும், நிறத்திற்கும், தரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரே ஒரு பேண்ட் கொரியரில் வந்தது.
அந்த நிறுவனத்திற்கு பல்வேறு வகையில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆர்டர் செய்யும் போது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள பொருளை திருப்பி அனுப்ப அனைத்து வசதிகளும் உள்ளது என்று தெரிவித்திருந்தனர்.
ஆனால் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆதாரங்களுடன் அந்த இளைஞர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இணைய வழி போலீசார் ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றும் இயலவில்லை. இதனால் மோதிலால் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனத்தின் கணக்கை முடக்கியுள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-
ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி எந்த பொருளையும் ஆர்டர் செய்ய வேண்டாம். ஆன்லைனில் கவர்ச்சி கரமான விளம்ப ரத்தை கொடுக்கும் பெரும்பாலான நிறு வனங்கள் பொது மக்களை ஏமாற்றுகின்றன. நம்பிக்கையுடைய ஒரு சில நிறுவனங்களில் மட்டும் ஆன்லைன் பொருட்களை வாங்குங்கள்.
பொதுமக்களை ஏமாற்றும் மேற்படி ஆன்லைன் நிறுவனங்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு நேற்று சென்னைக்கு வந்திருந்தார். சென்னை கிண்டியில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.இ.ஓ.) ஏற்பாடு செய்திருந்த ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
அப்போது மத்திய மந்திரி சுரேஷ் பிரபு பேசியதாவது:-
ஏற்றுமதியாளர்களை எப்போதும் என் குடும்பத்தினராகவே கருதுகிறேன். நாம் எந்த வகையில் சேர்ந்து செயல்பட்டால் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
தற்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு 7.6 சதவீதமாக உள்ளது. இது 8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் அளவு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும். இதை நான் தீர்க்கதரிசனமாக கூறவில்லை. இதுதான் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை. இதில், உற்பத்திப் பிரிவு, சேவைப் பிரிவு, வேளாண்மைப் பிரிவு, ஏற்றுமதி ஆகியவற்றில் இருந்து உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி அமைகிறது.
ஏற்றுமதியில் தற்போது நாங்கள் புதிய பட்டியல் ஒன்றை தயாரித்திருக்கிறோம். அதன்படி, எந்த நாட்டுக்கு என்னென்ன ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற விவரங்கள் தரப்படும்.
விற்பனைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட தயாரிப்புகள் அனுப்பப்பட வேண்டும். இதற்காக தனி பருவ இதழை வெளியிட இருக்கிறோம். இந்த பருவ இதழ் அனைத்து ஏற்றுமதியாளருக்கும் அனுப்பப்படும்.
தரமற்ற பொருட்களை தயாரிக்கவோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ வேண்டாம். யார் அதை அனுப்பினாலும், இந்தியாவில் இருந்து தரமற்ற பொருட்கள் வருகின்றன என்றுதான் வெளிநாடுகளில் பேசப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்படும்.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும்.
வேளாண் உற்பத்தி ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஆண்டு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மூலம் பெறப்பட்ட 620 மில்லியன் டன் உற்பத்திப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடும்.
காய்கறி, பழம் போன்றவற்றின் உற்பத்தியில் இந்தியா பெரிய அளவில் செயல்பட்டாலும், அவற்றை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு, மத்திய மந்திரி சுரேஷ் பிரபு அளித்த பேட்டி வருமாறு:-
சென்னையில் முதல்-அமைச்சரை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது புதிய தொழில் தொடங்கும் கொள்கைகளை உருவாக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
சென்னையில் 2-ம் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதிக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஏற்றுமதியில் திருப்பூர், உலக மையமாக விளங்குவதைப் போல, தமிழகத்தில் மேலும் பல உலக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்