search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sweet potato soup"

    சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இன்று இந்த கிழங்கை வைத்து சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1
    வெள்ளைபூண்டு - 4  பல்
    சர்க்கரை வள்ளி கிழங்கு - 1/4 கிலோ
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு.
    தேங்காய் பால் - 3 கப்
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை:

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி வெட்டிக்கொள்ளவும்.

    கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம் பின் பூண்டினைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சர்க்கரை வள்ளி கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு (5 நிமிடங்கள்) வதக்கவும்.

    இதில் தேங்காய் பால் சேர்த்து 25 நிமிடங்கள் மிக மிக சிறிய தீயில் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.

    பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறிய பின் மிக்சியில் நன்கு சுற்றி மீண்டும் லேசான சூடு செய்து உப்பு, மிளகு தூள் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×