search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Symbol of beauty"

    • ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
    • பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.

    ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..

    பீச் வண்ண ரோஸ்:

    மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மஞ்சள்:

    மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.

    ஆரஞ்சு:

    ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.

    வெள்ளை:

    வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    இளஞ்சிவப்பு:

    இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.

    நீலம்:

    நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.

    சிவப்பு:

    இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.

    ×