என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள்"
- பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
- தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் ரங்கசாமி, துணை தலைவர்கள் ராமசாமி, மூர்த்தி, சுப்பையா முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சிந்தனை வளவன் வரவேற்றார்.
பேரூராட்சி பணியாளர்கள் சங்க தலைவர் பிச்சைமுத்து சிறப்புரையாற்றினார். இதில் 15 பேரை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மாவட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் அமைத்து செயல்படுவது, அரசாணை எண் 115, 139, 152-ல் உள்ள பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் பகுதி நேரமாக பணியாற்றும் கீழ்த்தல பணியாளர்களை நீக்கி தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும், வருகிற 9-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகள் உட்பட 3 அரசாணையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.
- தூய்மை பணியாளர்கள் கருஞ்சட்டை பேரணியில் ஈடுபட்டனர்.
- 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மதுரை
மதுரை மாநகராட்சியில் சுகாதார பிரிவில் நிரந்தர பணியாளர்கள், தொகுப் பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் என பல்வேறு முறைகளில் 100 வார்டுகளிலும் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று காலை ஆண்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் காந்தி மியூசியம் முன்பு திரண்டனர்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார பணியா ளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.
பேரணி மதுரை மாநக ராட்சி அண்ணா மாளி கையில் நிறைவடைந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், தூய்மை பணியா ளர்களுக்கு எதிராகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசாணை எண் 152-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ. 172 வழங்க வேண்டும்.
அனைத்து பணியாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25 ஆண்டு காலமாக தொகுப்பூதிய அடிப் படையில் பணியாற்று பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.
- ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
- இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்பட 132 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இப்பணியாளா்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை விட குறைவாக நாளொன்று க்கு ரூ.395 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். போராட்டம் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
தொழிலாளர் நல சட்டங்களின் படியான சட்டபூர்வமான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
ஆனால் ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இரவு முழுவதும் கடும் பனியை பொறுப்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் காத்திருப்பு போரா ட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- தொழிலாளர்களை மலம் அள்ளுவதற்கு நான் கட்டாயப்படுத்தவில்லை.
- என்னை பழி வாங்குவதற்காக தொழிலாளர்கள் இவ்வாறு குற்றச்சாட்டு தெரிவித்து அவதூறு பரப்புகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 15-வது வார்டில் உள்ள பொது கழிப்பறை அனைத்தும் பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து உள்ளது.
இதில் அப்பகுதி மக்கள் மலம் கழிக்க இடவசதி இல்லாததால், பொதுக் கழிப்பிடத்தில் அனைத்து பகுதிகளும் மலம் கழித்து உள்ளே நுழைய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி அசுத்தமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் 15-வது வார்டு பகுதியில் உள்ள கழிப்பிடத்தை புதுப்பிக்கும் பணிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி தொடங்கியது. அந்த பணிக்காக பழைய கழிவறையில் ஏற்கனவே உள்ள மலத்தை அள்ளுவதற்காக தூய்மை பணியாளர்கள் இருவரை பேரூராட்சி அலுவலர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்படி சொல்லும் பணியை செய்யாவிட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதால் தூய்மை பணியாளர்கள் மலத்தை கையால் அள்ளி அப்புறப்படுத்தியதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தங்கள் ஆதங்கத்தை தூய்மை பணியாளர்கள் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இது குறித்து மாரண்ட அள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி கூறியதாவது:-
தொழிலாளர்களை மலம் அள்ளுவதற்கு நான் கட்டாயப்படுத்தவில்லை. என்னை பழி வாங்குவதற்காக தொழிலாளர்கள் இவ்வாறு குற்றச்சாட்டு தெரிவித்து அவதூறு பரப்புகின்றனர்.
என்னை மிரட்டுவதற்காக அவர்களே சென்று கழிவுகளை அகற்றி அதனை படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் பொதுகழிப்பிடத்தை புதுப்பிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டவுடன் எங்களது பணி முடிவடைந்து விடுகிறது. அதில் நாங்கள் தூய்மை பணியாளர்களை பணியமர்த்துவதற்கான வேலை இல்லை.
அதனை புதுப்பிப்பது ஒப்பந்ததாரரின் வேலை. ஒருவேளை ஒப்பந்ததாரரிடம் இவர்கள் கூலிக்காக சென்றிருக்கலாம். அவ்வாறு சென்றிருந்தார்கள் என்றால் அது தவறு. அவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
- சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
- மக்கள் குப்பைகளை தரம் பிரித்து மட்டுமே தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் கொட்டப்படுகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக உர கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை மட்டுமே உரக்கிடங்கிற்கு கொண்டுவந்து சேகரிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியா ளர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து மக்கள் குப்பைகளை தரம் பிரித்து மட்டுமே தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனால் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரக்கிடங்கிற்கு கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதத்தால் நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேக்கமடையும் சூழ்நிலை உருவாகிறது.
இந்நிலையில் சீர்காழி நகராட்சியில் பணியாற்றும் தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்களில் ஒரு பிரிவினர் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனி உரக்கிடங்கு கூடுதலாக அமைத்து தர வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்படுத்துவதை கண்டித்து தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நகராட்சி ஆணையர் வாசுதேவன் துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இதனை அடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- ரூ.721 சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
- இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என இவர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் நாள் ஒன்றுக்கு ரூ.721 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் உறுதி அளித்தபடி இதுவரை ரூ.721 சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் அறிவித்தபடி புதிய சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
நேற்று விடிய, விடிய அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நீடித்தது. ஆண், பெண் என ஏராளமான தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டது.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகி கவிதா கூறுகையில் கலெக்டர் அளித்த வாக்குறுதியின் படி எங்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.721 வழங்கப்பட வேண்டும். எங்களின் இந்த போராட்டம் காத்திருப்பு போராட்டம் ஆகும். நேற்று காலை போராட்டத்தை தொடங்கினோம். இரவு விடிய, விடிய போராட்டம் நடந்தது. இன்று 2-வது நாளாக நீடிக்கிறது. சம்பள பிரச்சினையில் முடிவு தெரியும் வரை இங்கேயே காத்திருப்போம், போராட்டத்தை தொடருவோம் என்றார்.
- ஏர்வாடியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
- தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் உடையார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வத்துரை அனைவரையும் வரவேற்றார். கடலாடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டார். ஏர்வாடி ஊரக வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி கிராம ஊராட்சி திட்டம் உறுதி செய்யபட்டன. உலக தண்ணீர் தின சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சித்தலைவர் செய்யது அப்பாஸ் பேசும்போது, பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும், ஏர்வாடியை தூய்மை நகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,நெகிழி பயன்படுத்தாமல் மஞ்சள் பை உபயோகப்படுத்த வேண்டும், தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா ஹுசைன் தலைமை தாங்கினார்.
- தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலைளை மனிதநேய தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர்.
மங்கலம்:
மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அவர்களை கௌரவப்படுத்தும் வகையாக இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா ஹுசைன் தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹாநசீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலைளை மனிதநேய தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.நிஷாத் அகமத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சாதிக், மனித நேய தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஷபியுல்லா, ஒன்றிய பொருளாளர் சிக்கந்தர் பாஷா, ஒன்றிய துணை செயலாளர் ஹக்கீம், ஒன்றிய துணை செயலாளர் சதாம் உசேன், மங்கலம் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மங்கலத்தில் மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
- ஓசூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளும் வழங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஓசூர்-பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளும் வழங்கினார்.
விழாவிற்கு பகுதி செயலாளர்கள் அசோகா, வாசுதேவன், மஞ்சுநாத், ராஜி மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணை செயலாளர் மதன் வரவேற்றார். மேலும் இதில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சந்திரன், துணை செயலாளர் சாக்கப்பா, மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் சாச்சு, அரப்ஜான் மற்றும் மாவட்ட ,மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
- தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
- 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வாசலில் தூய்மை பணியா ளர்களின் குடியிருப்புகளை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு குடியிருப்பாக சென்று தூய்மை பணியாளர்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவரிடம் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
பின்னர் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-
தூய்மை பணியாளர்க ளுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளது போல் மாநில அளவிலும் ஆணையம் அமைக்கபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற ஆணையம் அமைக்க வேண்டும்.
அவ்வாறு அமைக்கப்ப ட்டால் அனைத்து மாவட்டங்களும் சென்று ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க முடியும். நாங்கள் செல்லும் மாநிலங்களில் எல்லாம் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.
அதேநேரம் பணி நிரந்தரம் செய்யப்ப டுவதில் சில பிரச்சனைகள் இருப்பதையும் உணர்ந்துள்ளோம். கர்நாடக மாநிலத்தில் நேரடி ஊதியம் கொடுக்கும் முறை உள்ளது.
அதாவது நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் இருந்தாலும் ஊதியத்தை நகராட்சியோ, மாநகராட்சியோ நேரடியாக அளிக்கும். இதனால் சரியான ஊதியம் சரியான நேரத்தில் கிடைக்கும். பிஎஃப், இ.எஸ்.ஐ சரியான வகையில் இருக்கும். எனவே தமிழக அரசு இதுபோன்ற முறையை பின்பற்ற வேண்டும்.
விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது . கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் விஷவாயு தாக்கி 225 பேர் இறந்துள்ளனர் என்ற தகவல் வேதனை அளிக்கிறது.
இதனை தடுக்க தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு எந்திரங்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்திரம் உள்ளே நுழையா முடியாத அளவில் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களை இறக்கி பணியை செய்ய சொல்ல வேண்டும். அதுவும் கோர்ட் அறிவுரைகள் படி தொழிலா ளர்களின் உடல்நலம் பரிசோதித்து போதிய பாதுகாப்பு உபகரண ங்களுடன் தொட்டிக்குள் இறக்க வேண்டும். மேலே வந்த பிறகும் தொழிலாளர்களை உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
இது குறித்து போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், கவுன்சிலர் ஜெய்சதீஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- கோவிலூற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- மருத்துவர் பாண்டியராஜன், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் ஊராட்சிமன்ற தலைவர் சாருகலா ரவி தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சிமன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் அரசு மருத்துவர் பாண்டியராஜன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.
- தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.
- டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்ட 2752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.
டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.