search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pre Owned Car"

    முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்தியாவில் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்க முடிவு செய்து உள்ளது.


    ஆடம்பர கார் உற்பத்தியாளர்களில் முன்னணி நிறுவனம் போர்ஷே. இந்தியாவில் போர்ஷே நிறுவனம் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்குகிறது. போர்ஷே நிறுவனத்தின் முதல் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் மையம் ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ‘Porsche Approved' பெயரின் கீழ் இயங்க இருக்கின்றன.

    போக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக போர்ஷே அப்ரூவ்டு செண்டர், போக்வ்கேன் தாஸ் வெல்ட் ஆட்டோ மற்றும் ஆடி அப்ரூவ்டு பிளஸ் திட்டங்களின் வரிசையில் இணைகிறது. இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்திய கார்களை விற்பனை, வாங்குவது அல்லது எக்சேன்ஜ் செய்ய ஒற்றை தளமாக இவை மாறும். 

     போர்ஷே கார்

    போர்ஷே அப்ரூவ்டு மையங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் எக்சேன்ஜ் செய்வது போன்ற பணிகள் நடைபெறும். இதன் மூலம் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் வழங்குவதோடு, ஒரிஜினல் அக்சஸரீ, இன்சூரன்ஸ் மற்றும் நிதியுதவி உள்ளிட்டவைகளை வழங்கவும் போர்ஷே முடிவு செய்துள்ளது.

    போர்ஷே கார்களை புதிய முறையில் அனுபவிக்க வழி வகுக்கும் படி இந்த விற்பனை மையங்கள் செயல்படும் என போர்ஷே நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்த மற்ற தகவல்கள் விற்பனை மையம் துவங்கப்படும் போது அறிவிக்கப்படும் என போர்ஷே தெரிவித்துள்ளது.  
    ×