search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Dragons"

    • தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 5-வது ஆட்டத்தில் பெங்கால் டைகர்சை நேற்று எதிர் கொண்டது.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்சை வீழ்த்தியது.

    ரூர்கேலா:

    8 அணிகள் பங்கேற்கும் ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது.

    சென்னையை மையமாக கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சூர்மா கிளப்பிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் (1-4) தோற்றது.

    2-வது ஆட்டத்தில் கலிங்கா லான்செஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் (6-5) வென்றது. 3-வது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் உ.பி. ருத்ராவையும், 4-வது போட்டியில் 6-5 என்ற கணக்கில் கோனாசிகாவையும் வீழ்த்தியது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 5-வது ஆட்டத்தில் பெங்கால் டைகர்சை நேற்று எதிர் கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்காக கார்த்தி செல்வம் 16-வது நிமிடத்திலும், உத்தம் சிங் 37-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெங்கால் அணிக்காக ரூபிந்தர்பால் சிங் 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்த வெற்றி மூலம் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்கால் அணி 9 புள்ளியுடன் 2-வது இடத்துக்கு பின்தங்கியது. தமிழ்நாடு டிராகன்ஸ் 6-வது போட்டியில் டெல்லி பைப்பர்சை 13-ந்தேதி சந்திக்கிறது.

    ×