search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu IPS Officers Association"

    • சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
    • தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியீடு.

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், மிச்சாங் புயல் பாதிப்பால் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மிச்சாங் புயலால் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் இன்னல்களில் இருந்து தமிழக மக்களை காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மக்கள் சேவைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது.

    சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கும் வகையிலும், அரசின் முயற்சியில் கைகோர்க்கும் வகையில், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், தனது உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    ×