search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Target Olympic Podium Scheme"

    ஒலிம்பிக் பதக்கம் இலக்கு திட்டத்தில் தடகள வீரர்- வீராங்கனைகள் 6 பேரை மத்திய விளையாட்டுத்துமறை அமைச்சகம் சேர்த்துள்ளது. #TOPS
    ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவதற்காக இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒலிம்பிக் பதக்கம் இலக்கு திட்டம் (Target Olympic Podium Scheme- TOPS) ஒன்றை உருவாக்கியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த திட்டத்தின் கீழ் சேர்த்து வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளுக்காக இவர்கள் அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும்.

    இந்த திட்டத்தில் தற்போது தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் நரங் உள்பட 12 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டி முடிவடைந்த பிறகு வீரர்களை தேர்வு செய்யும் குழு கூடியது. இந்த திட்டத்தின் கீழ் யாரையெல்லாம் சேர்ப்பது, யாரையெல்லாம் நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இதில் இரண்டு பளுதூக்கும் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் காலவரையறை 2018 காமன்வெல்த் வரைதான் இருந்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் துப்பாக்கி சுடுதல் வீரர் நரங் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை.



    காமன்வெல்த் போட்டியில் 18 வயதே ஆன இளம் வீராங்கனையான ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தின் இறுதிப் போட்டியில் 51.32 வினாடிகளில் கடந்து அசத்தினார். மேலும் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இடம்பிடித்தார். இதனால் அவர் TOPS திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நவ்ஜீத் கவுர் திலோன், அகில் ஷியோரன், எலாவெனில் வாளரிவான், ராகி ஹால்டர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ×