என் மலர்
முகப்பு » thalapadhi 68
நீங்கள் தேடியது "thalapadhi 68"
- இயக்குனர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் புதிய கீதை.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இயக்குனர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் புதிய கீதை. இப்படத்திற்கு இசையமைப்பாள யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து மீரா ஜாஸ்மின், அமீஷா படேல், கலாபவன்மணி, கருணாஸ், சரத்பாபு, சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படத்திற்கு பிறகு விஜய்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் நீண்ட வருட கனவாக இருந்தது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தின் மூலம் 20 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த இந்த கூட்டணி தற்போது இணைந்துள்ளதால் ரசிகர்களின் உற்சாகத்தில் உள்ளனர்.
×
X