search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanks for all"

    இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்பட உள்ளார் என்பதை அறிந்த அவரது தந்தை வர்தமான், மக்களின் பிரார்த்தனையால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். #Abhinandan #BringBackAbhinandan
    சென்னை:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது.

    இந்த தாக்குதலின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்தது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. 
     
    ஜெனிவா ஒப்பந்தத்தின்படி அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுத்தது. இதனால் அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.

    இதற்கிடையே, நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என்பதை அறிந்த அவரது தந்தை வர்தமான், அனைவரது பிரார்த்தனையால் அபினந்தன் விடுதலை செய்யப்பட உள்ளார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அபினந்தன் விடுதலை செய்யப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். கடவுளின் ஆசியுடன் அபினந்தன் விடுதலை செய்யப்பட உள்ளார். அவரை நினைத்துப் பெருமிதப்படுகிறோம்  என தெரிவித்துள்ளார். #Abhinandan #BringBackAbhinandan
    ×