search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thavalakuppam"

    தவளக்குப்பத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    புதுவை ஏம்பலத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூர் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது28), வேன் டிரைவர். இவரது தம்பி யோகேஷ் சென்னையில் தங்கி வேலைபார்க்கிறார். வாரவிடுமுறையில் நல்லாத்தூருக்கு வந்து செல்வார்.

    அதுபோல நேற்று இரவு யோகேஷ் வீட்டுக்கு வருவதாக தனது அண்ணன் ராஜ்மோகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து யோகேசை அழைத்து வர ராஜ்மோகன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார்.

    நோனாங்குப்பம் பழைய பாலம் என்.ஆர். நகர் அருகே வந்த போது 2 வாலிபர்கள் ராஜ்மோகனிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டினர். மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டதால் கை காட்டுகிறார்கள் எண்ணி ராஜ்மோகன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் கத்தியை எடுத்து ராஜ்மோகனின் கழுத்தில் வைத்து பணம்- நகைகயை கொடுக்குமாறு மிரட்டினர். அதற்கு ராஜ்மோகன் தன்னிடம் பணம் மற்றும் நகை எதுவும் இல்லை. தன்னிடம் செல்போன் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த செல்போனை பறித்து கொண்டு அவர்கள் அங்கிருந்து ராஜ்மோகனை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து ராஜ்மோகன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், திருமுருகன் மற்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கத்தியை காட்டி ராஜ்மோகனிடம் செல்போனை பறித்தவர்கள் இவர்கள்தான் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் பரத் (26) மற்றும் நைனார்மண்டபம் புதுநகர் சோழன்வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் (21) என்பதும் இவர்கள் இதுபோன்று உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் பகுதிகளில் பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 5 செல்போன்களும், 2 தங்க செயின்- தங்கமோதிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தவளக்குப்பத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய மற்றொரு விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அரியாங்குப்பம்:

    தவளக்குப்பம் ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் ரவி என்ற கோவிந்தராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமாக இடையார் பாளையம் பழைய பாலம் அருகே நிலம் உள்ளது. இவருக்கும், இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்த நோணாங்குப்பம் செந்தில்குமாருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று ரவி தனது நிலத்துக்கு சென்றார். அப்போது செந்தில்குமார் தனது நிலத்தின் வரப்பில் எப்படி நடந்து வரலாம்? என கேட்டு ரவியிடம் தகராறு செய்தார்.

    இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி ரவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில், ரவிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகிறார்கள்.

    தவளக்குப்பம் அருகே தந்தை இறந்த சோகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா. இவர்களது மகள் புவனேஸ்வரி (வயது 15) இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். இதற்கிடையே  கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறில் சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.

    தந்தை மீது அதிகளவு பாசம் வைத்திருந்த புவனேஸ்வரிக்கு தந்தையின் மரணம் தாங்கி கொள்ள முடியவில்லை. எப்போதும் தந்தையின்  நினைவிலேயே புவனேஸ்வரி இருந்து வந்தார். சோகத்தை மறைக்க  குருசுகுப்பத்தில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கவைத்து இருந்தனர். எனினும் புவனேஸ்வரி பாட்டி சரோஜினியிடம்  தனது தந்தை இறப்பு குறித்து அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். அவரை சரோஜினி சமாதானம்  செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சரோஜினி கடைக்கு  சென்றிருந்த வேளையில்  புவனேஸ்வரி வீட்டின் குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். பொருட்கள் வாங்கி கொண்டு சரோஜினி வீடு திரும்பிய போது பேத்தி புவனேஸ்வரி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புவனேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே புவனேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தவளக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    அரியாங்குப்பம்:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). டிரைவர். இவர் அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் காதலித்து வந்த இளம்பெண் திடீரென மாயமானார். அதே வேளையில் லட்சுமணனும் மாயமாகி இருந்தார்.

    இதையடுத்து மாயமான பெண்ணின் பெற்றோர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை லட்சுமணன் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் போக்சோ சட்டத்தின் கீழ் கடத்தல், கற்பழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற லட்சுமணனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்டனர். இன்று அவர்கள் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.

    தவளக்குப்பம் அருகே வறுமை காரணமாக விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அரியாங்குப்பம்:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் சிவபாலன் (வயது39). இவருக்கு நிஷா, சந்தியா ஆகிய 2 மனைவிகளும், 4 குழந்தைகளும் உள்ளனர். விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகராக இருந்து வந்த சிவபாலன் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார்.

    இதற்கிடையே குடிப்பழக்கத்துக்கு அடிமையான சிவபாலன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார். மேலும் கட்சி பணியில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். தொடர்ந்து சிவபாலன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. மேலும் மதுகுடிக்க பணம் இல்லாமல் சிவபாலன் திண்டாடி வந்தார்.

    இதனால் தற்கொலை செய்து கொள்ள சிவபாலன் முடிவு செய்தார். நேற்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். உடனடியாக சிவபாலனை அவரது குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிவபாலன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தவளக்குப்பம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை வி‌ஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே டி.என். பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது65). நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் காலில் ஏதோ பூச்சி கடித்தது போல மகாலட்சுமி உணரவே எழுந்து பார்த்தார். அப்போது வி‌ஷப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    அருகில் தூங்கி கொண்டிருந்த தனது மகன் கணேசனிடம் தகவல் கூறிய மகாலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கணேசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகாலட்சுமியை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×