என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » third high court judge
நீங்கள் தேடியது "third high court judge"
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. #MLAsDisqualification #18MLAs #disqualification
சென்னை:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடந்த ஆண்டு தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து அரசு தலைமை கொறடா கொடுத்த புகாரின் அடிப்படையில், வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, சட்டசபை சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14-ந்தேதி நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். சபாநாயகர் உத்தரவு சரிதான், அவரது உத்தரவில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவு உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோதமானது. அதனால், அந்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டார்.
இருவரது தீர்ப்பில் எது சரியானது என்று முடிவு செய்ய 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை நியமித்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடும்படி, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேலிடம், 18 எம்.எல்.ஏ.க்களின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கடிதம் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருவதாக ஐகோர்ட்டு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #MLAsDisqualification #18MLAs #disqualification #tamilnews

×

X