search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukkadayur"

    • இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.
    • இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாக விளங்குகின்றார்.

    திருக்கடையூர் தல மகாமண்டபத்தின் வடபால் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில் இயமனை நிக்கிரகானுக்கிரகம் பண்ணின அவசரத்தில் (தோற்றநிலை) தெற்குமுகமாக எழுந்தருளியுள்ளார்.

    வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட இயமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார்.

    வீழ்த்தி கிடக்கும் இயமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது.

    இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.

    இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாக விளங்குகின்றார்.

    இம்மூர்த்திக்கெதிரில் வடக்கு முகமாக யமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித்திருக்கோலத்தில் காணப்படுகின்றார்.

    இக்காலசங்கார மூர்த்திக்கு ஆண்டில் பன்னிரண்டுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இவர் சித்திரைப் பெருவிழாவில் ஆறாந்திருநாளன்று தான் வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, ஆசி வழங்கி அருளினார்.
    • இந்த அற்புதமும் இங்கு தான் நிகழ்ந்தது.

    மார்க்கண்டேயன் உயிரை பறித்து செல்லமுடிவு செய்த எமன் துணிச்சலாக திருக்கடையூர் தலத்துக்குள் நுழைந்தான்.

    இதை கண்டதும் மார்க்கண்டேயர் ஓடிச் சென்று சிவலிங்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான்.

    அந்த கயிறு சிவலிங்கம் மீதும் பட்டது. அவ்வளவு தான்..... ஆவேசம் அடைந்த ஈசன் லிங்கத்தை பிளந்தபடி வெளியில் வந்தார். தன் இடது காலால் எமனை ஓங்கி உதைத்தார்.

    ஒரே ஒரு உதைதான். ஈசன் உதைத்தால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? அந்த இடத்திலேயே எமன் உயிர் பிரிந்தது.

    எமன் செத்துப் போனால் என்ன ஆகும்? அதன்பிறகு உலகில் யாருமே மரணம் அடைய வில்லை.

    இதனால் உலகில் மக்கள் தொகை அதிகரித்தது. இதையடுத்து பாரம் தாங்காமல் பூமா தேவி அவதிப்பட்டாள்.

    ஒரு கட்டத்தில் பூமாதேவியால் பொறுக்க முடியவில்லை. எனவே அவள் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்தாள்.

    மக்கள் தொகை பெருக்கத்தால் உலகம் தள்ளாடுவதை கண்டு மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானை அணுகி எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி வேண்டினார்கள்.

    இதனால் எமன் மீது ஈசன் இரக்கம் கொண்டார்.

    எமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, ஆசி வழங்கி அருளினார். இந்த அற்புதமும் இங்கு தான் நிகழ்ந்தது.

    அதை சுட்டிக் காட்டும் வகையில் திருக்கடையூர் தலத்தில் எமதர்ம ராஜாவும் எழுந்தருயுள்ளார். கால சம்ஹார மூர்த்திக்கு நேர் எதிரில் பிரகாரத்தில் எமதர்ம ராஜாவை காணலாம்.

    • மார்க்கண்டேயர் தமது பூசைக்காகக் கொண்டு வந்த பிஞ்சிலம் என்னும் சாதி மல்லிகைக் கொடி இங்கு தலமரமாக உள்ளது.
    • எனவே இத்தலம் "பிஞ்சிலவனம்" என்று அழைக்கப்படுகிறது.

    மார்க்கண்டேயர் தமது பூசைக்காகக் கொண்டு வந்த பிஞ்சிலம் என்னும் சாதி மல்லிகைக் கொடி இங்கு தலமரமாக உள்ளது.

    எனவே இத்தலம் "பிஞ்சிலவனம்" என்று அழைக்கப்படுகிறது.

    இந்தச் சாதிமல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது.

    இங்கே இம்மலர் இறைவனுக்கு மட்டுமே அணிவிக்கப்படுகிறது.

    மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

    இந்த சாதி மல்லியின் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 முறை அர்ச்சித்ததற்குச் சமம் என்று சொல்லப்படுகிறது.

    விழாவுக்கு வருகை தரும் உறவினர்களைத் தங்க வைக்க, விருந்து பரிமாற எனயாவற்றுக்கும் வசதியாக சத்திரங்கள், மண்டபங்கள் உள்ளன.

    * மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் இருபதாவது கிலோமீட்டரில் திருக்கடையூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

    * மயிலாடுதுறையில் தங்கும் விடுதிகளும் உணவுவிடுதிகளும் ஏராளம்! திருக்கடையூரிலும் மிக நல்ல தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.

    * திருக்கடையூரில் சஷ்டியப்தபூர்த்தி விழா நடத்துவது மிகவும் சிறப்பானது என்பதால், கோவிலில் தினமும் குறைந்தது 30 முதல் 35 சஷ்டியப்தபூர்த்தி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    * விழாவுக்கு வருகை தரும் உறவினர்களைத் தங்க வைக்க, விருந்து பரிமாற எனயாவற்றுக்கும் வசதியாக சத்திரங்கள், மண்டபங்கள் உள்ளன.

    * திருமணத்தை நடத்தி வைக்க ஏராளமான புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களே நாதஸ்வரத்திலிருந்து விருந்து வரை எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறார்கள்.

    * வருகிறவர்களின் வசதிக்குத் தகுந்தமாதிரி ஓட்டல் சதாபிஷேகம், ஓட்டல் சஷ்டியப்தபூர்த்தி என்கிற பெயரில் இங்கே இருக்கும் ஓட்டல்கள் வருபவர்களைக் கவர்கின்றன.

    • மார்கண்டேயருக்கு தனி சந்நிதி உள்ளது.
    • மார்கண்டேயரின் தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

    திருக்கடையூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மணல்மேடு என்னும் கிராமம் இருக்கிறது.

    அங்கே தான் மார்க்கண்டேயர் தங்கி இருந்த ஆசிரமம் இருந்தது. தற்போது அந்த ஆசிரமம் மார்கண்டேயர் கோவிலாக மாறியுள்ளது.

    மிருகண்டு முனிவர், மிருகண்டேஸ்வர் என்னும் பெயருடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    மார்கண்டேயருக்கு தனி சந்நிதி உள்ளது. மார்கண்டேயரின் தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

    விநாயகர், ஆஞ்சநேயர், சுப்ரமணியர் என்று சுவாமி விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    குழந்தைப்பேறு அற்றவர்கள், திருமணம் கைகூடாதவர்கள், நோய்த் தொல்லைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்புகிறவர்கள் அனைவரும் இந்தக் கோவிலில் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலன் கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் இருக்கிறது.

    • விநாயகரின் இந்த லீலை பற்றி மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார்.
    • முதலில் விநாயகரை கும்பிடுங்கள். அவர் அமிர்தம் தருவார் என்று கூறி தேவர்களை விஷ்ணு அனுப்பி வைத்தார்.

    பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தத்தை தேவர்கள் கடம் (குடம்) ஒன்றில் கொண்டு வந்ததையும், அதில் இருந்து சிவபெருமான் லிங்கமாக தோன்றி அருள் புரிந்ததையும் அனைவரும் அறிவோம்.

    ஈசனை கண்ட மகிழ்ச்சி தேவர்களுக்கு ஏற்பட்டாலும், அமரத்துவம் தரும் அமிர்தம் தங்களுக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்று வருந்தினார்கள்.

    அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே என்ற தவிப்பு அவர்களுக்கு ஏற்பட்டது.

    எனவே அமரத்துவம் தரும் அமிர்தம் தருமாறு அமிர்தகடேசுவரரை நோக்கி தேவர்கள் அனைவரும் வழிபட்டனர்.

    பக்தன் கேட்பதைத்தான் இல்லை என்று சொல்லாமல் ஈசன் கொடுப்பாரே? அமிர்தகடேசுவரர் மறுவினாடியே தேவர்கள் முன்பு தோன்றி காட்சி கொடுத்தார்.

    அவரிடம், "எங்களுக்கு அமிர்தம் வேண்டும்" என்று தேவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அமிர்தகடேசுவரர் அருகில் உள்ள குளத்தில் அமிர்தத்தை வைத்துள்ளேன்.

    போய் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு மறைந்து விட்டார்.

    மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் உடனே அருகில் இருந்த குளத்துக்கு ஓடினார்கள்.

    அந்த குளத்தில் சல்லடைப்போட்டு தேடிப் பார்த்தனர். ஆனால் அமிர்தம் கிடைக்க வில்லை.

    தேவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்த அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் நினைவு வந்தது. உடனே அவர்கள் விஷ்ணுவிடம் ஓடிச் சென்று விபரத்தைக் கூறினார்கள்.

    ஈசன் தருவதாக கூறிய அமிர்தம் எங்கே போயிற்று என்று தன் ஞானதிருஷ்டியால் விஷ்ணு பார்த்தார். அப்போது விநாயகர் அந்த அமிர்தத்தை எடுத்து ஒளித்து வைத்திருப்பது தெரிந்தது.

    உலகில் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபட வேண்டும் என்பது மரபு. அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்கிறோம்.

    அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், பிறகு அதை உண்ண தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகரை முதலில் நினைக்கவும் வழிபடவும் தேவர்கள் மறந்து விட்டனர்.

    இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகர் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டது தெரிந்தது.

    விநாயகரின் இந்த லீலை பற்றி மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார்.

    முதலில் விநாயகரை கும்பிடுங்கள். அவர் அமிர்தம் தருவார் என்று கூறி தேவர்களை விஷ்ணு அனுப்பி வைத்தார்.

    தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து வழிபட்டு மன்னிப்புக் கேட்டனர்.

    மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார்.

    தேவர்கள் அமிர்தம் உண்டு அமரத்துவம் பெற்றனர்.

    அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் இந்த விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர். நாளடைவில் அது கள்ள விநாயகர் என்று மாறி விட்டது.

    இந்த கள்ள விநாயகர் திருக்கடையூர் ஆலயத்தின் தொடக்கத்தில் கன்னி மூலையிலோ அல்லது முச்சந்திகளிலோ இல்லை. ஆலயத்தின் உள்ளே மகா மண்டபம் பகுதியில் ஈசனை பார்த்தபடி ஓரு ஓரத்தில் உள்ளார்.

    அதாவது அமிர்தம் எடுத்து பதுங்கி இருந்ததை சுட்டிக் காட்டுவது போல அவரது சன்னதி மகா மண்டபத்தில் ஈசனின் கருவறைக்கு தென் கிழக்கில் ஓரு ஓரமாக உள்ளது. அவரது துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது.

    இதன் காரணமாக இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

    உறவினர்கள் மற்றும் பகைவர்களிடம் நீங்கள் எதையாவது இழந்து தவித்தால் இந்த விநாயகரை வழிபட சுபம் ஏற்படும்.

    முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. அதில் இத்தலத்து கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார்.

    சமஸ்கிருதத்தில் இவரை "சோர கணபதி" என்று அழைக்கிறார்கள். அபிராம பட்டர் அந்தாதி பாடத் தொடங்கிய போது இந்த கள்ள விநாயகரை புகழ்ந்து பாடி விட்டே அந்தாதி பாடி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அன்னையின் அழகுத் தோற்றத்தை லலிதா சகஸ்ர நாமமும், சௌந்தர்ய லகரியும், கேசாரி பாதாந்தம் வர்ணிக்கின்றன.
    • வாமா என்றால் அழகு என்ற பொருள். "வாமி" என்றால் அழகி என்று பொருள்.

    திருக்கடவூரில் தேவியை அழகு என சொல்லத்தக்க வகையில் "அபிராமி" எனும் அழகுப்பெயர் கொண்டு அன்னை திகழ்கிறாள்.

    "அபிராமி" என்றால் "அழகு" என்று பொருள்.

    "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வலில்" என்று அபிராமி பட்டர் பாடுவார்.

    அன்னையின் அழகுத் தோற்றத்தை லலிதா சகஸ்ர நாமமும், சௌந்தர்ய லகரியும், கேசாரி பாதாந்தம் வர்ணிக்கின்றன.

    வாமா என்றால் அழகு என்ற பொருள்.

    "வாமி" என்றால் அழகி என்று பொருள். சிவபெருமானின் வாம பாகத்தில் விளங்குவதாலும் "வாமி" ஆவாள்.

    மங்களமான அழகை உடைய திரிபுரசுந்தரியை அபிராமியின் வடிவில் பட்டர் கண்டு மகிழ்கிறார்.

    17 நிர்வாகம்

    இது தருமை ஆதீனத்தைச் சேர்ந்த தேவஸ்தானங்களில் ஒன்று.

    திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் இருபத்தாறாவது குருமகா சந்திதானம் ஸ்ரீ&ல&ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஆட்சிபீடத்தை ஏற்ற நாள் முதல் இவ்வாலயத்தைச் சிறப்புறப் பரிபாலித்து வருகிறார்கள்.

    ×