என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirumanam Kaikooda"
- அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.
- இங்கு வழிபாடு செய்பவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.
அச்சரபாக்கம் தலத்தில் சர்வேஸ்வரன் அட்சரம் என்ற எழுத்தின் வடிவமாக இருப்பதால் இங்கு வழிபாடு செய்யும் அன்பர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.
அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.
மேலும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதால் அரசுப் பணிபுரிய வாய்ப்பும் ஆளுமைத் திறனும், பதவி உயர்வும் கிடைக்கும்.
ஏழ்மையினாலோ அல்லது வீண் பழியினாலோ உற்றார் உறவினர்களாலும், நண்பர்களாலும் சிறுமைப்படுத்தப்படும் துர்பாக்கியம் ஏற்பட்டால், அதற்கு உடனடியாகப் பரிகாரமளிக்கும் திருத்தலம்.
கடன் தொல்லைகள் அல்லது தவறான நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவப்பெயர் ஏற்பட்டு மனதில் எப்பொழுது பார்த்தாலும், பிறரால் என்ன ஏற்படுமோ என்ற நிலை ஏற்படும் போது, வியக்கத்தக்க வகையில் அந்த அச்சத்தை போக்கும்.
இத்தகைய அரிய சக்திக்குக் காரணம், கருவறையில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு அடியில் சில ரகசிய அதர்வண வேத யந்திரங்கள், பிரத்யேகமாக இத்தகைய தோஷங்களைப் போக்குவதற்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதே ஆகும்.
- ஆலயங்களில் பிரதட்சனம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.
- கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள்.
ஆலயங்களில் பிரதட்சனம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.
அவற்றை தெரிந்து கொண்டு பிரதட்சனம் செய்தால் அளவில்லாத பலன்களை பெற முடியும்.
அந்த வகையில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் "தலவிருட்ச பிரதட்சனம்" மிகவும் புகழ் பெற்றது.
இங்குள்ள தல விருட்சத்தை 1008 தடவை சுற்றுவதாக வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.
இந்த பிரதட்சனம் கார்த்திகை மாதம் நடைபெறும்.
பக்தர்கள் கார்த்திகை 1ந்தேதி தொடங்கி 31ந்தேதி வரை 1008 பிரதட்சனத்தை மேற்கொள்வார்கள்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த பிரதட்சனம் நடைபெறும்.
கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள்.
சமீப ஆண்டுகளாக இந்த வழிபாடு மிகவும் புகழ் பெற்றுள்ளது.
- இந்த தலத்தில் உமையாட்சீஸ்வரர் சன்னதியில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.
- இந்த வழிபாடு மூலம் மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் திருமணம் கைகூட செய்யும் சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த தலத்தில் உமையாட்சீஸ்வரர் சன்னதியில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.
இது அகத்தியருக்கு சிவபெருமான் காட்டிய திருமண கோலமாக கருதப்படுகிறது.
திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சன்னதிக்கு வந்து மலர் மாலை அணிவித்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.
சுவாமிக்கும், அம்பாளுக்கும் வேஷ்டி புடவை சாத்தி வழிபாடு செய்வது நல்லது.
யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது நட்சத்திர தினத்தன்று இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
வழிபாட்டுக்கு வரும் போது 3 மாலைகளை வாங்கி வர வேண்டும்.
கோவில் அர்ச்சகர் சொல்வதற்கு ஏற்ப அந்த மாலைகளை பயன்படுத்தி வழிபாடுகள் செய்யப்பட வேண்டும்.
அதன்பிறகு திருமண வயதில் இருப்பவர் தங்களுக்கு எத்தனை வயதாகிறதோ அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
சுவாமிக்கு கல்கண்டு, முந்திரி, திராட்சை ஆகியவை வாங்கி வந்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பிறகு அதை அங்குள்ள பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம்.
இந்த வழிபாடு மூலம் மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்