search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruppuvanam vaigai Theertham"

    • அம்பாள் பெயர், “சௌந்தர நாயகி, மின்னனையாள்” என்பதாகும்.
    • இங்குள்ள நடராசர், அற்புதமான வேலைப்பாடுடைய, பெரிய அழகுமிக்க மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    திருப்பூவனம் புஷ்பவனேஸ்வரர் வைகை தீர்த்தம்

    வைகைக் கரையில் அமைந்துள்ள இத்திருகோவிலுக்கு, வைகை ஆறே தீர்த்தமாக உள்ளது.

    இத்தலத்து இறைவன் பெயர், "புஷ்பவனேஸ்வரர், பூவன நாதர்" என்பனவாகும்.

    அம்பாள் பெயர், "சௌந்தர நாயகி, மின்னனையாள்" என்பதாகும்.

    தல மரம், பாலமரம் ஆகும். தேவார பாடல் பெற்ற திருத்தலம், இது.

    இங்குள்ள நடராசர், அற்புதமான வேலைப்பாடுடைய, பெரிய அழகுமிக்க மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    இங்கு பங்குனியில் பெரும் விழா நடைபெறுகிறது.

    காசிக்கு சமமான தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தம், நிறைவான தரிசனம் இது.

    பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து, இரசவாதம் செய்து, அவளுக்கு பொன்னைக் கொடுக்க, அதனை வைத்து அவள் இங்கு சிவலிங்கம் அமைத்து, வழிபட அதுவும் மிகவும் அழகாக இருப்பதைக் கண்டு ஆசையுடன் அந்த சிவலிங்கத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம்.

    இவ்வாறு அவள் கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் உள்ளதை இன்றும் காணலாம்.

    இக்கோவிலில் "பொன்னனையாள்", "சித்தர்கள்" ஆகியோர் உருவங்கள் உள்ளன.

    திருவாசகத்திலும், கருவூர்த் தேவரின் திவிசைப்பாவிலும் இத்தலம் போற்றப்படுகிறது.

    பிரம்மன் வழிபட்ட தலம், இது.

    இத்தலத்தில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை.

    அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவருக்கும் வைகை மணல், சிவலிங்கமாக தோன்றியதால், மூவரும் மறுகரையில் இருந்தே இக்கரையை மிதிக்க அஞ்சி வணங்க, அதற்கு இறைவன் அவர்கள் நேநேர கண்டு வணங்குவதற்கு ஏதுவாக, நந்தியை விலகச் செய்தருளினார்.

    அதனால் இத்தலத்தில் இன்றும் இந்த நந்தி சாய்ந்துள்ளதைக் காணலாம்.

    வைகையின் மறுகரையில் இருந்து அவர்கள் தொழுத இடம், "மூவர் மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது.

    இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம்" என அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து தீர்த்தமான வைகை ஆறு வடக்கு நோக்கி, "உத்தரவாகினி"யாக இங்கு ஓடுகிறது.

    எனவே, இந்த தீர்த்தம் விசேஷமாகக் கூறப்படுகிறது.

    ×