என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » thiruvaroor bypoll
நீங்கள் தேடியது "thiruvaroor bypoll"
திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #ECI #ThiruvarurByElection #CycloneGaja #TNElectionCommision
புதுடெல்லி:
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கலந்து பின்னர் முடிவு செய்வதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் தெரிவித்தனர் என்றார்.
மேலும், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிலை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டு உள்ளார். #ECI #ThiruvarurByElection #CycloneGaja #TNElectionCommision
திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் என தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. #ThiruvarurByElection #GajaCyclone #ECI #TNGovernment
புதுடெல்லி:
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கின.
இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடருவதற்கு தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், திருவாருரில் நிவாரண பணிகளை தொடர தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.
நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது. தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் அரசியல் கட்சியினர் பங்கேற்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection #CycloneGaja #ECI #TNGovernment
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. #ThiruvarurByElection #DMK #PoondiKalaivanan
சென்னை:
திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ம் தேதி கடைசி நாளாகும்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும்.
குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, சாகுல் அமீதை தனது வேட்பாளராக நாம் தமிழர் கட்சி அறிவித்தது.
இதற்கிடையே, அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என டி.டி.வி. தினகரன் இன்று பிற்பகல் அறிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் தொகுதியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்தனர்.
தி.மு.க.வில் நேற்று மட்டும் 28 பேர் விருப்ப மனு கொடுத்தனர். நிறைய பேர் மு.க.ஸ்டாலின் போட்டியிட கூறி மனு கொடுத்தனர். திருவாரூரைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் உதயநிதியை வேட்பாளராக நிறுத்த கோரி மனு அளித்தனர். இதனால் தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் மூத்த தலைவர்களும் நேர்காணல் நடத்தினர்.
நேர்காணலுக்கு பிறகு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivanan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X