search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thozhar CheGuevara"

    • சென்சார் போர்டில் கட்செய்யப்பட்ட எல்லா காட்சிகளும் இங்கு காண்பிக்கப்பட்டது.
    • படத்திலும் எல்லா சீன்களும் உள்ளன. ஆனால் வசனங்கள் வேறு.

    சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:-

    நான் இதுவரை 250 படங்களில் நடித்துள்ளேன். எல்லாப்படங்களிலும் நடிப்பது மகிழ்ச்சியான விசயம்தான். வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் அந்த நடிப்பு பணி என்பது எனக்கு மகிழ்ச்சியான விசயம். மகிழ்சியாக ஒரு படத்தில் சென்று நடிப்பேன். படம் ஓடினால் கூடுதல் மகிழ்ச்சி வரும். ஓடவில்லை என்றால் வர்த்தம்தான். ஆனால் நடிப்பு என்பது மகிழ்ச்சியான விசயம்.

    பெருமைக்குரிய படம் என்றால் அதில் ஒருசிலதான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமேன்றால் தந்தை பெரியாராக நடித்ததுதான். அதன்பின் சில பெயர்களை தாங்கி நடிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். கதைக்கும் எம்.ஜி.ஆர்.-க்கும் எந்த வகையில் சம்பந்தம் கிடையாது. எம்.ஜி.ஆர். மகன் படத்தில் நான்தான் எம்.ஜி.ஆர்.

    தோழர் சேகுவேரா உடன் என்னை எந்த வகையிலும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒப்பற்ற புரட்சியாளர். சேகுவாராக இருக்க முடியாது. அவரது பெயரில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி.

    புரட்சிக்காரன் படத்தில் சேகுவேரா கெட்அப்பில் நடித்திருக்கிறேன். சென்சார் போர்டில் கட்செய்யப்பட்ட எல்லா காட்சிகளும் இங்கு காண்பிக்கப்பட்டது. படத்திலும் எல்லா சீன்களும் உள்ளன. ஆனால் வசனங்கள் வேறு. சென்சார் விதிக்கு உட்பட்ட வசனங்கள் பேசப்பட்டுள்ளது. மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதனால் செப்டம்பர் 20-ந்தேதி படம் ரிலீஸ் ஆவதில் தடங்கல் வந்துவிடுமோ என வினியோகஸ்தரர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சென்சாரில் என்ன சொல்லப்பட்டதோ அதை மாற்றி செய்து விட்டோம்.

    இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×