என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tips To Get Rid Of Dark Circles"
- பெண்கள் அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
- கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும்.
பெண்கள் குறிப்பாக அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் கண்கள் கீழே கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. முதலில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான். கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.
தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது, கவலை, மனஅழுத்தம், காபி அதிகம் குடிப்பது, சூரிய ஒளியில் அதிகம் இருப்பது, கண்களை நன்றாக அழுத்தி கசக்குவது, தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவைகளே முக்கியமான காரணங்கள். இதனை எளிமையாக வீட்டில் இருக்கும் பொருளை கொண்டே நீக்கி விடலாம்.
கருவளையத்தை நீக்க சில டிப்ஸ்:
* முதலில் ஒரு ஐஸ்கட்டியை எடுத்துக் கொண்டு அதனை மென்மையாக கண்களில் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்து வரலாம். இதனை தினமும் 2 முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
* கிரீன் டீ பேக் இருந்தால் அதனை எடுத்து சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து கண்களுக்கு மேலே 10 நிமிடங்கள் வைக்கலாம்.
* புதினா அழகை பராமரிக்க உதவும் முக்கியமான காரணிகளில் ஒன்று. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதனால் புதினா இலைகளை அரைத்து அந்த சாறை கருவளையத்தின் மீது 10 நிமிடம் வைக்கலாம்.
* காய்ச்சாத பால் இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன், பன்னீர் 2 டீஸ்பூன் சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டன் பஞ்சை வைத்து ஊற வைக்கவும். பின்னர் அந்த பஞ்சுகளை 20 நிமிடம் கண்களுக்கு மேலே வைத்தால் போதும்.
* ஒரு தக்காளியை பிழிந்து நன்கு சாறு எடுத்து கொள்ளுங்கள், அதில் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அதனுடன் 2 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை கருவளையத்தில் போட்டு 15 நிமிடங்கள் வைத்து காய்ந்த பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்