search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur youth arrest"

    திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுர உச்சியில் ஏறிய ஒரு வாலிபர் திடீர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு கூடி வாலிபரை இறங்குமாறு கூறினர். ஆனால் வாலிபர் இறங்க மறுத்து குதிக்க போவதாக தொடர்ந்து கூறினார்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வாலிபரின் நண்பர்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவரை சமாதானம் செய்ய முடியவில்லை.

    இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, அந்த வாலிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து வாலிபர் இறங்க தொடங்கினார். தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் உடுமலையை சேர்ந்த சபீர் (வயது 25) என்பதும், அவர் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் பிரிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர் அருகே 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்துள்ள பெருமாநல்லூர் தொரவலூர் மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 19) பனியன் நிறுவன தொழிலாளி. சம்பவத்தன்று இவர் 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியதால் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவனை அனுமதித்தனர்.

    பின்னர் இது குறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் பெருமாநல்லூர் போலீசார் விரைந்து சென்று பனியன் தொழிலாளியான வினோத்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    திருப்பூரில் தங்கி இருந்த வங்காள தேச வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    தொழில் நகரமான திருப்பூரில் வெளி நாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி இருந்து பனியன் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    திருப்பூரில் தங்கி வேலை பார்க்கும் வெளி நாடு மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் முகவரி, போட்டோ, ஆதார் அட்டை உள்ளிட்டைவகளை சமர்பிக்க வேண்டும் என திருப்பூர் போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பூர் செவந்தான் பாளையத்தில் வங்காள தேசத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் அனுமதியின்றி தங்கி இருப்பதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் நல்லூர் போலீசாரிடம் இதனை கண்காணிக்கும் படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் செவந்தான் பாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    போலீசார் இன்று காலை அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வங்காள தேசத்தை சேர்ந்த இப்ராகிம் (25), சுபியன் (30), பர்காத் (27) ஆகிய 3 வாலிபர்கள் அனுமதியின்றி தங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது மேற்கு வங்க முகவரி இருந்தது. அவர்கள் போலி பாஸ்போர்ட்டு மூலம் இந்தியா வந்தது தெரிய வந்தது. அவர்கள் எப்படி இங்கு வந்தனர்? அவர்களுக்கு மேற்கு வங்க முகவரி கிடைத்தது எப்படி ? நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

    ×